ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை, இலங்கை அரசாங்கம் முதன் முறையாக உத்தியோகபூர்வமாக நிராகரித்துள்ளது.
கடந்த மார்ச் 22ஆம் திகதி இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர், இந்த தீர்மானத்தை எதிர்ப்பதாக அமைச்சர் டியூ குணசேகர நாடாளுமன்ற அமர்வில் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், ஜி.எல்.பீரிஸ் முதல் தடவையாக தமது அரசாங்கத்தின் ஆட்சேபனையை இந்த தீர்மானம் தொடர்பில் வெளியிட்டுள்ளதாக ஏசியன் ரிபியூனின் ஆசிரிய தலையங்கத்தில் தெரிவித்துள்ளது.
அதுவும், அமெரிக்க மண்ணில் வைத்து, அமெரிக்காவின் முக்கிய தீர்மானத்திற்கு எதிராக ஜி.எல்.பீரிஸ் கருத்து கூறியிருப்பது முக்கியத்துவத்தை பெறுவதாக ஏசியன் ரிபியூன் தெரிவித்துள்ளது.
அமெரிக்க வாஷிங்டனில் பிரசித்தி பெற்ற ‘உட்ரோ வில்சன்’ நிலையத்தில் கடந்த 15ஆம் திகதி இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் இதனை தெரிவித்தார்.
இந்த கருத்தின் மூலம் இலங்கையின் இனப்பிரச்சினைக்கு உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தீர்வு ஒன்றே அவசியம் என்பதை ஜி.எல்.பீரிஸ் உணர்த்தியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் ஒப்புதல் வழங்கப்பட்ட அமெரிக்க தீர்மானத்தின்படி கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
எனினும், அமைச்சர் ஜி.எல்.பீரிசின் கருத்து இலங்கையின் உள்நாட்டு விவகாரம் மற்றும் நல்லிணக்க முயற்சிகளில்ää இவ்வாறான தேவையற்ற தலையீடுகள் அவசியம் அற்றது என்பதனை உணர்த்தியிருப்பதாக ஏசியன் ரிபியூன் குறிப்பிட்டுள்ளது.
0 Responses to ஐ.நா தீர்மானத்தை இலங்கை உத்தியோகபூர்வமாக நிராகரிப்பு