Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் எதைக் கூறியிருந்தாலும், தாம் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் தீர்மானத்தின் பின்னாலேயே நிற்போம் என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது.

நேற்று நண்பகல் வொசிங்டனில் நடைபெற்ற நாளாந்த செய்தியாளர் சந்திப்பில், இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் விக்ரோரியா நுலன்ட்டிடம், ஹிலாரி கிளின்ரன் – ஜி.எல்.பிரிஸ் சந்திப்பின் இறுதியான விபரங்கள் உள்ளதா என்று கேள்வி எழுப்பட்டது.

இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், வூட்ரோ வில்சன் நிலையத்தில் உரையாற்றியபோது அமெரிக்கா உள்ளிட்ட 23 நாடுகளின் ஆதரவுடன் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இலங்கை நிராகரிப்பதாகக் கூறியதை செய்தியாளர்கள் அவரிடம் சுட்டிக்காட்டியிருந்தனர்.

அதற்குப் பதிலளித்த இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் விக்ரோரியா நுலன்ட்,

இலங்கை சந்திப்புத் தொடர்பாக அழகாகவும் விரிவாகவும் கடந்த வெள்ளிக்கிழமை பேசியதாக நினைக்கிறேன். அப்போது முழுமையான விபரங்களை வெளிப்படுத்தினேன். நாங்கள் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் தீர்மானத்தின் பின்னால் நிற்கிறோம். அதன்படியே செயற்படுகிறோம். அதையே தொடர்வோம் என்று தெரிவித்துள்ளார்.

இதேவேளை நேற்றைய செய்தியாளர் சந்திப்பில் சரத் பொன்சேகா விடுதலை தொடர்பாக அவர் எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.

0 Responses to நாங்கள் பின்னாலேயே நிற்போம் | அமெரிக்கா

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com