ஈழத்தில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு முள்ளிவாய்க்கால் போரில் பன்னாட்டு படைகள் இணைந்து தமிழர்கள் மீது கொத்து குண்டுகள் வீசி கொன்றதின் துக்க நாளை உலகம் எங்கும் உள்ள தமிழர்கள் அனுசரித்து வருகின்றனர்.
இந்த வகையில் புதுக்கோட்டை அருகில் உள்ள தோப்புக்கொல்லை ஈதிழியர் முகாமில் தங்கியுள்ள ஈழத் தமிழர்கள் அன்று மாலை முள்ளிவாய்க்கால் நினைவு தினம் அனுசரிக்க திட்டமிட்டனர்.
இந்த நிகழ்ச்சியில் முள்ளிவாய்க்காலில் நடந்த கொடுமைகளை நினைவு கூறும் படங்கள் வைத்து அஞ்சலி செலுத்த ஏற்பாடுகள் செய்திருந்தனர். ஆனால் படங்கள் வைத்து அஞசலி செலுத்தக் கூடாது என்று போலிசார் அனுமதி மறுத்துவிட்டனர்.
அதனால் முகாம் மக்கள், இளைஞர்கள், குழந்தைகள் ஏராளமானோர் தங்கள் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி முள்ளிவாய்க்காலில் சிங்கள வெறியர்களால் கொல்லப்பட்ட தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.
செம்பருத்தி
0 Responses to ஈதிழியர் முகாமில் முள்ளிவாய்க்கால் நினைவு தினம்