கடந்த திமுக ஆட்சியின் போது மதுரை கலெக்டராக இருந்தவர் சகாயம். நேர்மையான அதிகாரியான இவரால் அப்போதைய மதுரை திமுகவினர் சிரமப்பட்டனர். கடந்த சட்டமன்ற தேர்தலின் போதும் மிகவும் நேர்மையாக செயல்பட்டதால் மக்கள் மீது இவருக்கு நல்ல மதிப்பு இருந்து வந்தது.
அதிமுக ஆட்சிக்கு வந்ததும் பல மாவட்ட கலெக்டர்களை மாற்றம் செய்தது. ஆனால் கலெக்டர் சகாயத்தை மட்டும் மாற்றம் செய்யாமல் மதுரையிலேயே வைத்திருந்தது.
இந்நிலையில் மதுரை அதிமுகவினருக்கு ஒத்துழைக் காததால் சகாயம் மீது அதிருப்தி இருந்து வந்தது. அதிமுக அமைச்சர் ஒருவர் தொடர்ந்து நெருக்கடி கொடுத்தும், சகாயம் தன் கடமையில் இருந்து தவற மறுத்து விட்டாராம்.
இந்த சூழ்நிலையில் கலெக்டர் சகாயம் மதுரையில் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு கோ- ஆப்டெக்ஸ் இயக்குநர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அன்சூல் மிஸ்ரா (உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர்) மதுரை கலெக்டராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
0 Responses to ஆளுங்கட்சிக்கு ஒத்துழைக்காததால் கலெக்டர் சகாயம் அதிரடி மாற்றம்