முள்ளிவாய்கால் இனப்படுகொலையை முன்னிட்டு தமிழ் இளையோர்கள் யேர்மனிய மக்களிடம் சிங்கள அரசு எம் இனத்தின் மீது புரிந்த படுகொலையை அயராது எடுத்துக் கூறுகின்றனர். அந்தவகையில் கடந்த நாட்களில் Landau, Sinsheim மற்றும் Mülheim/Ruhr நகரங்களில் கவனயீர்ப்பு நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.
நகர மத்தியில் ஒழுங்கு செய்யப்பட நிகழ்வுகளில் முள்ளிவாய்காலில் சிங்கள அரசால் படுகொலை செய்யப்பட்ட உறவுகள் அனைவருக்கும் யேர்மனிய மக்களும் அஞ்சலி செலுத்தினர்.
அத்தோடு யேர்மன் தமிழ் இளையோர் அமைப்பு உறுப்பினர்கள் துண்டுப்பிரசுரம் மற்றும் இலங்கையில் கொலைக்களம் ஆவணப்படத்தை மக்களுக்கு வழங்கி கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.அதிகமான இளையோர்கள் யேர்மனியில் பிறந்து வாழ்ந்தாலும் உணர்வால் தமது தாய்நாட்டின் விடுதலைக்காய் ஆற்றும் பணி பாராட்டப்பட வேண்டியது .இவர்களது சேவை தொடர எமது வாழ்த்துக்கள்.
யேர்மன் தமிழ் இளையோர்களினால் அயராது முன்னெடுக்கப்படும் தேசியப் பணி
பதிந்தவர்:
ஈழப்பிரியா
24 May 2012
0 Responses to யேர்மன் தமிழ் இளையோர்களினால் அயராது முன்னெடுக்கப்படும் தேசியப் பணி