கடந்த ஜனாதிபதி தேர்தலில் சரத் பொன்சேகாவை, ஐக்கிய தேசியக்கட்சி ஆதரிப்பது பயங்கரமான விளையாட்டாகும் என்று அமரிக்க தூதரகம், அந்தக்காலக்கட்டத்தில் இராஜாங்க திணைக்களத்துக்கு அறிவித்திருந்தது.
விக்கிலீக்ஸ் இந்த தகவலை கசிய விட்டுள்ளது.
சரத் பொன்சேகாவின் எவ்வாறான பொருளாதாரக் கொள்கையை ஐக்கிய தேசியக் கட்சி ஏற்றுக்கொண்டுள்ளது என்பது தெளிவாக இல்லை என்று அமெரிக்க தூதரகம் குறிப்பிட்டிருந்தது.
2010 ஆம் ஆண்டு ஜனவரி 4ஆம் திகதியன்று அமெரிக்கத்தூதுவர் பற்றீசியா பியூட்டினியஸ், ராஜாங்க திணைக்களத்துக்கு அனுப்பிய தகவலில், சரத் பொன்சேகா ஒரு இராணுவ வீரர். அத்துடன் அவருக்கு பொருளாதாரம் பற்றி ஓரளவு அறிவே உள்ளது. அதனை அவரே ஏற்றுக் கொண்டுள்ளார்.
இந்தநிலையில், ஜனாதிபதி தேர்தலில் பொருளாதாரக்கொள்கையே முன்னிலைப் பெறுகிறது.
எனினும், மஹிந்த ராஜபக்சவும் சரத்பொன்சேகாவும் தமது திறமைகளையும் மற்றவரின் பழைய தவறுகளையும் மாத்திரம் சுட்டிக்காட்டி பிரசாரத்தில் ஈடுபடுவதாக அமெரிக்கத்தூதுவர் இராஜாங்க திணைக்களத்துக்கு அறிவித்திருந்தார்.
ஜனாதிபதி தேர்தலில் பொன்சேகாவை ஐ.தே.க ஆதரித்தமை ஆபத்தான விளையாட்டு | அமெரிக்கா
பதிந்தவர்:
ஈழப்பிரியா
24 May 2012
0 Responses to ஜனாதிபதி தேர்தலில் பொன்சேகாவை ஐ.தே.க ஆதரித்தமை ஆபத்தான விளையாட்டு | அமெரிக்கா