Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மகிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் இந்தியா, அமெரிக்கா உட்பட ஏகாதிபத்திய நாடுகளுடன் இரகசியமான உடன்படிக்கைகளை மேற்கொண்டுள்ளது. ஆனால் நாட்டுக்குள் தேசபற்றை காட்டி மக்களை ஏமாற்றுகின்றது என்று ஜே.வி.பி.யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவித்தார்.

அமெரிக்கா செல்லும் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் அங்கு கொண்டு செல்லும் இரகசிய செயல்திட்டத்தை நாட்டுக்குள் பகிரங்கப்படுத்த வேண்டுமென்றும் அவர் வலியுறுத்தினார்.

இது தொடர்பாக ஜே.வி.பி.யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க மேலும் கருத்து தெரிவிக்கையில், நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்த மாட்டோம். இந்தியாவிற்கோ அமெரிக்காவிற்கோ ஏகாதிபத்திய வாதிகளுக்கோ அடிபணிய மாட்டோம். இவ்வாறெல்லாம் இலங்கை மக்களை ஜனாதிபதியும் அரசாங்கமும் ஏமாற்றுகின்றது. ‘

தேசாபிமானம் எல்லாம் உள் நாட்டிற்குள் தான் இருக்கின்றது. ஆனால் அமெரிக்காவின் அதட்டலுக்கு அடங்கிப் போயுள்ள அரசாங்கம் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்றுவது தொடர்பில் செயல்திட்ட வரைபை தயாரித்துள்ளதோடு இதனை வெளிநாட்டமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் ஊடாக இரகசியமாக அனுப்பி வைக்கவுள்ளது.

இந்த இரகசிய செயல் திட்டம் என்ன? இதன் பின்னணியில் உள்ளவை என்னவென்பதை நாட்டு மக்களுக்கு அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும்.

உள்நாட்டில் ஏகாதிபத்தியவாதிகளை எதிர்க்கும் தேசபற்று நாடகத்தை அரங்கேற்றும் அரசாங்கம் மக்களுக்கு உண்மைகளை வெளிப்படுத்த வேண்டும். ஆனால் அரசாங்கம் அவ்வாறு செய்வதில்லை.

ஏன் ஏகாதிபத்திய நாடுகளுடன் அரசாங்கம் இரகசிய உடன்படிக்கைகளை செய்து கொண்டுள்ளது. அந்நாடுகளுக்கு தேவையான விதத்திலேயே முதலாளித்துவ பொருளாரத்தை அரசாங்கம் முன்னெடுக்கின்றது.

இந்த நாடுகளுடன் நெருக்கமான தொடர்புகள் பேணப்பட்டு வருகிறது.

ஹிலாரி இந்தியா வருகை

அமெரிக்கா ராஜாங்க செயலாளர் ஹிலாரி கிளின்டனின் இந்திய விஜயம் தொடர்பில் அலட்டிக்கொள்ளத் தேவையிவ்லை. எமது நாட்டுப் பிரச்சினையில் தலையிடாது எந்த நாட்டு தலைவரும், ராஜதந்திரியும் எந்த நாட்டுக்கு விஜயம் செய்தாலும் அதுதொடர்பில் ஆராய்வது அவசியமற்றதொன்றாகும் என்றார்.

0 Responses to ஏகாதிபத்திய நாடுகளுடன் அரசாங்கம் இரகசிய உடன்படிக்கை

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com