சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் எனும் உன்னத பண்புகளைத் தந்த பிரென்சு தேசம், ஆர்மேனிய இனப்படுகொலையினை அங்கீகரித்தது போல், தமிழீழ இனப்படுகொலையினையும் அங்கீகரிக்க கோரும், கையெழுத்துப் போராட்டம் பிரான்சில் தொடங்கியது.
கடந்தாண்டு ஆர்மேனிய படுகொலையினை ஒர் இனப்படுகொலையாக அங்கீகரிக்கும் சட்ட மூலமொன்று பிரென்சு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருந்தது.
இந்நிலையில், முள்ளிவாய்க்கால் மூன்றாமாண்டினை நினைவேந்தி ,தமிழீழத்திலும் நடந்தது ஒர் இனப்படுகொலையே என்பதனை, பிரென்சு அரசினை அங்கீரிக்க கோரும் கையெழுத்துப் போராட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரான்ஸ்-மக்கள் பிரதிநிதிகளின் ஒருங்கிணைப்பில் இக்கையெழுத்துப் போராட்டம் தொடங்கியுள்ளது.
மே 12ம் நாள் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் தொடக்க நாள் முதல் இக்கையெழுத்துப் போராட்டம் தமிழர் வர்த்தக நிலையங்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் ஊடாக மக்களின் கையெழுத்துக்கள் பெறப்படவுள்ளதாக இதன் ஒருங்கிணைப்பாளர் சுதன்ராஜ் தெரிவித்துள்ளார்.
பிரான்சில் அதிபர் தேர்தல் நடந்து முடிந்து அடுத்து நாடாளுமன்ற தேர்தல் இடம்பெறவிருக்கின்ற நிலையில் பிரென்சு அரசியல் ஆட்சிபீடத்தினைக் கோரும் இக்கையெழுத்துப் போராட்டம் முக்கியமானதாக அமையுமென மேலும் அவர் தெரிவித்தார்.
இக்கையெழுத்துப் போராட்டத்தினை நா.த.அரசாங்கத்தின் உள்துறை அமைச்சர் நாகலிங்கம் பாலசந்திரன் அவர்கள் ஒப்பமிட்டு உத்தியோகபூர்வமாக தொடங்கி வைத்துள்ளார்.
இக்கையெழுத்துப் போராட்டத்தில் இணைந்து கொண்டு செயற்பட விரும்புவோர் 06 51 05 53 00 ஃ 06 62 36 50 07 ஆகிய தொடர்பிலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறு வேண்டப்பட்டுள்ளனர்.
இனப்படுகொலையை அங்கீகரிக்குமாறு பிரான்ஸ் அரசினைக் கோரும் கையெழுத்து போர் ஆரம்பம்
பதிந்தவர்:
தம்பியன்
12 May 2012
0 Responses to இனப்படுகொலையை அங்கீகரிக்குமாறு பிரான்ஸ் அரசினைக் கோரும் கையெழுத்து போர் ஆரம்பம்