Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பிரான்சில் கடந்த 6ம் திகதி நடைபெற்ற அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற சோசலிஸ் கட்சி வேட்பாளர் கொலந்த இன்று புதிய அதிபராக பதவியேற்று அதிபர் மாளிகை செல்கிறார்.

பிரான்சிய தயாரிப்பான சிற்றோன் காரில் திறந்த வெளி பயணமாக இவர் அதிபர் மாளிகைக்கு அழைத்து வரப்படுகிறார்.

இவர் இறுதிச் சுற்று தேர்தலில் முன்னாள் அதிபர் சார்கோஸியை 51.6 வீதமான வாக்குகள் பெற்று தோற்கடித்தது தெரிந்ததே.

இதே தினம் கிரேக்கத்திலும் பொதுத் தேர்தல் நடைபெற்றது ஆனால் இன்றுவரை ஆட்சி அமைக்க முடியாத நெருக்கடி நிலவுகிறது.

நேற்று மாலை நடைபெற்ற கடைசிச் சுற்றுப் பேச்சுக்களிலும் இணக்கப்பாடு காண முடியாமல் இன்று மாலைவரை இறுதிச் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு கட்சியும் தத்தமது மந்திரிப்பதவிகள் அடங்கிய பட்டியலுடன் இன்று மாலை சமூகமளிக்கும்படி அதிபர் காலோஸ் அறிவித்துள்ளார்.

இன்றும் இணக்கப்பாடு காண முடியாவிட்டால் நாளை அதிகாலை பொதுத்தேர்தல் திகதி அறிவிக்கப்படும்.

அதேவேளை கடும் வலதுசாரிப் போக்குடைய வென்ஸ்ர கட்சி இந்த உரையாடலுக்கு அழைக்கப்படாமல் நிராகரிக்கப்பட்டுள்ளது.

கிரேக்கத்தில் இனிமேல் ஒரு தேர்தல் நடக்குமானால் அது யூரோ நாணயத்தில் இருந்து விலகுவதா இல்லையா என்ற கேள்விக்கான சர்வஜனவாக்கெடுப்பாகவே அமையும்.

மறுபுறம் இத்தாலியின் இன்றைய அவலமான பொருளாதார நிலை காரணமாக அந்த நாட்டின் வங்கிகளின் கடன் வலு நிலை தரவிறக்கம் செய்யப்பட வேண்டிய அபாயம் தோன்றியுள்ளது.

வங்கிகளின் தர மதிப்பீட்டு தாபனமான அமெரிக்க மூவ்டி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் மொத்தம் இத்தாலியில் உள்ள 26 வங்கிகள் தரவிறக்கம் செய்யப்பட வேண்டிய மோசமான நிலையில் உள்ளதாக தெரிவித்துள்ளது.

மூவ்டி தாபன கருத்துப்படி இத்தாலிய வங்கிகள் நான்கு புள்ளிகள் தரவிறக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது.

இப்படி செய்தால் இன்றைய முன்னணி ஐரோப்பிய நாடுகளின் வங்கிகளின் தரத்திற்கு வெகு தூரம் வெளியே இத்தாலி வங்கிகள் தூக்கி வீசப்பட்டுவிடும்.

அதுமட்டுமல்லாமல் இந்த வங்கிகள் மற்றய வங்கிகளிடமிருந்து பணத்தை பெறும்போது அதிக வட்டி கொடுக்க வேண்டும், மறுபுறம் வாடிக்கையாளருக்கும் அதிக வட்டிக்கே கடன் கொடுக்க வேண்டிய நெருக்கடி உருவாகும்.

அதிகவட்டி வங்கித் தொழிலை பாதித்து பொருளாதார சுழர்ச்சியின் உச்சந்தலையில் இருந்து கீழ் நோக்கி விறைப்பை ஏற்படுத்தும் இந்த விறைப்பு இத்தாலியின் இன்றைய நிலைக்கு மேலும் பாதகமாகவே அமையும்.

மேலும் இன்றைய அதிகாலை ஐரோப்பிய செய்திகளின்படி..

அமெரிக்க அதிபர் தேர்தலில் றிப்ப்ளிக்கன் வேட்பாளர் தெரிவு தேர்தலில் மிற் றொம்னியை எதிர்த்து போட்டியிட்ட றொன் போவுல் போட்டியில் இருந்து பின்வாங்கியுள்ளார்.

மறுபுறம்,

கடந்த வாரம் ஜேர்மனியின் சிலஸ்வீக் – கொல்ஸ்ரைன் மாநிலங்களில் நடைபெற்ற தேர்தலில் டேனிஸ்காரரின் சிறுபான்மை கட்சியான எஸ்.எஸ்.யூ மூன்று ஆசனங்களை பெற்று வெற்றியீட்டியது தெரிந்ததே.

தற்போது எஸ்.பி.டி கட்சி பசுமைக்கட்சியுடன் இணைந்து ஆட்சியமைக்கும் வாய்ப்பை இக்கட்சி நெருங்கிவிட்டதாக அறிவிக்கப்படுகிறது, நேற்றுவரை பேச்சுக்கள் இழுபறியாக இருந்து இன்று முன்னேற்றமடைந்துள்ளன.

தொடர்ந்தும் போட்டியிடுவது இலாபகரமாக அமையாது என்று அவர் கூறியுள்ளார்.

0 Responses to பிரான்சில் புதிய அதிபர் பதவியேற்பு | இத்தாலி வங்கி வீழ்ச்சி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com