ரஸ்யாவில் தயாரிக்கப்பட்ட சூகொய் சூப்பஜெட் 100 இரக ஜெற் விமானம் இந்தோனிPசியா தலைநகர் ஜக்காத்தாவில் இருந்து 50 நிமிட பயணத் தொலைவில் காணாமல் போனது.
புத்தம் புதிய விமானம், பரீட்சார்த்தமான பறப்பை எடுத்தாலும் இதில் பயணித்த 46 பயணிகளும் மரணித்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
புறப்பட்ட சொற்ப நேரத்தில் ராடரில் இருந்து விலகிய விமானம் காட்டுப்பகுதியில் விழுந்துள்ளதாக கருதப்படுகிறது.
மொத்தம் 200 வரையான பணியாளர்கள் தேடுதல் பணிகளில் இறங்கியுள்ளார்கள், சம்பவம் நடைபெற்ற நேரம் இருட்டாகவும், மழையாகவும் இருந்ததால் தேடுதல் பணிகள் தாமதமடைந்தன.
தற்போது விமானத்தின் பாங்கள் ஆங்காங்கு காணப்படுவதாக அறிவிக்கப்படுகிறது.
உலகம் முழுவதும் விமான சேவைகள் பாரியளவில் அதிகரித்து வருகின்றன, வீதிகளில் வாகனங்கள் ஓடுவது போல தற்போது விமான வேவைகளின் நெருக்குவாரம் ஆகாயத்தில் நிறைந்துவிட்டது.
எனவே விமான விபத்துக்களும் வாகன விபத்துக்கள் போல அன்றாட செய்தியாகி வருகிறது. வாகனங்களை போதையில் ஓடி விபத்தை சந்திப்பது போல இப்போது விமானிகளும் போதையில் விமானங்களை ஓடி விபத்துக்களை ஏற்படுத்தி வருகிறார்கள்.
இதன் ஓரங்கமாக விமானிகளின் போதையை பரிசோதிக்க சுவீடனில் உள்ள ஏர்லாண்டா விமான நிலையத்தில் இருந்து பறப்பெடுக்கும் விமானிகளின் இரத்தம் சோதிக்கப்பட்டடே பறப்பெடுக்க அனுமதிக்கப்படுகிறது.
இதுவரை சுமார் 3600 பரிசோதனைகளை விமான நிலைய போலீசார் நடாத்திவிட்டார்கள்.
இதற்குள் நேற்று எஸ்.ஏ.எஸ் விமானத்தின் விமானி ஒருவர் வசமாக மாட்டிக் கொண்டார், இவர் போதையில் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
போலீசாரால் மறித்து வைக்கப்பட்ட இவருடைய இரத்தத்தில் 1.0 அளவுக்கு போதை இருந்துள்ளது.
விமானிகளுக்கு 0.2 வீதம் போதை இருக்கலாம் என்று கூறப்படுகிறது, ஆனால் இவர் அந்த எல்லையை தாண்டியிருந்தார், ஆனால் எஸ்.ஏ.எஸ் அனுமதிக்கப்பட்ட 0.2 வீதத்தையும் ஏற்கவில்லை.
போதையில் வந்து விமானத்தையும், பயணிகளையும் இவர்கள் சங்காரம் செய்தால் பெரிய தொகையில் நஷ்டஈடு கட்ட வேண்டிய சுமை விமான நிறுவனங்களுக்கே வரும் என்பது தெரிந்ததே.
முன்னைய காலங்களுடன் ஒப்பிட்டால் போதை விபத்துக்களின் காரணமாவது அதிகரித்து வருகிறது.
டென்மார்க் வழியாக போகும் பல ரஸ்ய கப்பல்களின் தலைமை மாலுமிகள் போதையில் கப்பல்களை தரைதட்ட விடுவதும், டேனிஸ் போலீசார் உலங்கு வானூர்தியில் சென்று கப்பல்களை மோத விடாமல் தடுப்பதும் பெரும் தலை வலியாக இருந்து வருகிறது.
இதில் முக்னியம் பெறுவோர் ரஸ்யர்களே.
கடல் – தரை – ஆகாயம் என்று மூன்று இடங்களிலும் விபத்துக்களின் கதாநாயகனாக போதையே இருந்துவருகிறது.
போதை மன்னர்களாக உலகின் முன்னணி வகிப்பது ரஸ்யர்களே என்பதால் ரஸ்யா கப்பல்கள், விமானங்கள் குறித்து எச்சரிக்கை அவசியம் என்பதும் அவதானிக்கத்தக்கது.
அலைகள்
0 Responses to புத்தம் புதிய ரஸ்ய விமானத்திற்கு தொடக்கமே முடிவானது