எகிப்தில் இன்று புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெறுகிறது.
இதில் ஐந்து வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள் அவர்களில் முக்கியமானவர் அமீர் மூஸா இடம் பெறுகிறார், இவர் முன்னர் முபாரக்கின் பிரதமராக இருந்தவர்.
அதேவேளை எகிப்திய இஸ்லாமிய சகோதர அமைப்பும் தனது வேட்பாளரை நிறுத்தியுள்ளது.
கருத்துக் கணிப்பு நிலை வருமாறு :
அமீர் மூஸா : 31.7 வீத ஆதரவு
அக்மட் ஸாபிக் : 22.6 வீதம்
முகமட் மூர்சி : 14. 8 வீதம்
அப்டில் மொனீம் அபுல் பொற்றோத் : 14.6 வீதம்
கமீட் ஸபாகி : 11. 7 வீதம்
இப்போது நடப்பது முதல் சுற்று வாக்கெடுப்பாகும் இன்று புதன் நாளை வியாழன் ஆகிய இரு தினங்கள் நடைபெறும்.
அதிக வாக்குகள் பெறும் இருவர் வரும் யூன் 17ம் திகதி இறுதிச் சுற்றில் போட்டியிடுவார்கள்.
அமீர் மூஸா மேலை நாடுகளின் ஆதரவு பெற்றவர் ஆனால் முபாரக்குடன் இருந்து கரங்களில் கறை படிந்த வரலாறு உடையவர், மேலை நாடுகளிடம் விலை போகக் கூடியவர்.
அக்மட் ஸாபிக் இன்னொரு கருத்துக் கணிப்பில் முதலிடம் பெறுகிறார் இவர் இஸ்லாமிய ஸாரியார் சட்டங்களை ஆதரிப்பதால் மேலை நாடுகளின் வெறுப்புக்கு உள்ளாகியவர்.
தேர்தலில் குதித்துள்ள அனைவருமே எகிப்திய பிற்போக்கு சிநதனைகளை ஆதரித்தாலே வெற்றி பெற முடியும் என்பதால் பிற்போக்கு பித்தலாட்டத்தில் குதித்துள்ளனர்.
இஸ்லாம் மதமே சிறந்தது – ஸாரியார் சட்டங்களே சிறந்தன – மத ஆசாடபூதித் தனங்கள் – பெண்ணடிமை போன்ற பிற்போக்கு வாதங்களில் திரண்ட கிழங்குகளாக உள்ளார்கள்.
மாறிவரும் உலகில் இளையோர் கொண்டுள்ள ஆவலை பூர்த்தி செய்யும் ஆளுமை உள்ள வேட்பாளர் ஆடுகளத்தில் இல்லை.
இது இளையோருக்கு பலத்த ஏமாற்றமாக உள்ளது.
எவ்வாறாயினும் 5000 ம் ஆண்டுகளாக சர்வாதிகார ஆட்சியை சந்தித்த எகிப்தில் ஒரு சிறிய ஜனநாயகப் பூ மலர்வது வரவேற்கப்பட வேண்டியதே என்கிறார்கள் நோக்கர்கள்.
அலைகள்
0 Responses to எகிப்தில் இன்று அதிபர் தேர்தல்