இன்று ஞாயிறு நடைபெற்று முடிந்த தேர்தலில் எதிர்க்கட்சி சோசலிச வேட்பாளர் கொலன்ட வெற்றி பெற்றுள்ளார்.
இவருக்கு 52 இல் இருந்து 53 வீதமான வாக்குகள் கிடைத்துள்ளன.
இவருடன் போட்டியிட்ட பிரான்சிய அதிபர் ஸார்கோஸி தோல்வியடைந்துள்ளார்.
பிரான்சிய வீதிகளில் மக்கள் இப்போது நடனமாடிக் கொண்டிருக்கிறார்கள்.
பிள்ளைகள், பெற்றோர், வெளிநாட்டவர் என்று நடுத்தர வர்க்கத்தின் நடனம் வீதியெங்கும் அமோகமாக இருக்கிறது.
முன்னதாக வெளிநாடுகளில் இருந்து தபால் மூலம் அளிக்கப்பட்ட வாக்குகள் எண்ணப்பட்டன, அதில் கொலன்ட அமோக வெற்றி பெற்றிருந்தார்.
பாய் பாய் ஸாக்கோ !! பிரசிடன்ற் பிராங்கோ..!! என்று எங்கு பார்த்தாலும் கோஷங்கள் வானைப்பிளக்கின்றன.
நாட்டின் பணமெல்லாம் வலதுசாரிகளிடம் போய்விட்டது நடுத்தர மக்கள் ஏழைகளாகிவிட்டோம்.
நாட்டை ஏழை – பணக்காரராக பிரித்த ஸார்கோஸியின் காலம் முடிந்துவிட்டது என்று மக்கள் கூறுகிறார்கள்.
1995 ல் பிரான்சியோ மிற்றரான்ட் பதவி விலகிய பின்னர் மறுபடியும் சோசலிச அதிபர் ஒருவர் பதவிக்கு இப்போதுதான் வருகிறார்.
அலைகள்
0 Responses to பிரான்ஸ் தேர்தலில் கொலன்ட வெற்றி