திருஞானசம்மந்தர் வழியில் வந்த ஆதின மடத்திற்கு தனிப்பெருமை உண்டு. பெருமைவாய்ந்த மடத்திற்கு நித்தியானந்தா, ரஞ்சிதாவுடன் வருவது பெருத்த அவமானம். ரூ.1 கோடி லஞ்சமாக கொடுத்தே நித்தியானந்தா முடி சூட்டிக்கொண்டார்.
எனவே ஆதின மடத்தில் இருந்து நித்தியானந்தாவை உடனே வெளியேற்ற வேண்டும் என்று, காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் கூறியிருந்தார்.
இதுதொடர்பாக இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்த நித்யானந்தா,
’’நான் காஞ்சி மடத்தை மதிக்கிறேன். யாரோ கொடுத்த தவறான தகவலின் அடிப்படையில் காஞ்சி பெரியவர் தவறுதலாக கூறி இருக்கிறார். நான் நடிகை ரஞ்சிதாவை எங்கு சென்றாலும் அழைத்து செல்வதாக கூறி இருக்கிறார்.
ரஞ்சிதா என்னுடன் இல்லை. நான் எங்கு சென்றாலும் அவர் என்னுடன் வருகிறார் என்று கூறுவது தவறு. இதுதொடர்பாக காஞ்சி சங்கராச்சாரியாரை நேரில் சந்தித்து விளக்க தயாராக இருக்கிறேன்.
மதுரை ஆதீனமாக நான் பட்டம் சூடிய விசயத்தில் காஞ்சி சங்கராச்சாரியார் உள்பட யாரும் தலையிட வேண்டாம்.
அவர் தெரிவித்த கருத்துக்களை 10 நாட்களில் திரும்பபெற வேண்டும். இப்போது என்னை எதிர்ப்பவர்கள் விரைவில் என் பக்கம் உள்ள நியாயத்தை உணர்ந்து ஆதரிப்பார்கள்’’ என்று கூறினார்.
0 Responses to நித்தி | காஞ்சி சங்கராச்சாரியார் மோதல்