மதுரை ஆதினத்தின் இளைய ஆதினமாக நித்தியானந்தா நியமிக்கப்பட்டதற்கு இந்து மதத்தின் பல்வேறு அமைப்புகளும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில் மதுரையில் 08.05.2012 அன்று பேட்டியளித்த நித்தியானந்தா, என் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறிய ஆதீனங்கள் அவர்களுடைய அறையில் 24 மணி நேரமும் இயங்கக் கூடிய ரகசிய கேமராக்கள் வைப்பார்களா? நான் அதை வைக்க தயார். அப்போது தெரியும் பாலியல் குற்றச்சாட்டில் யார் சிக்குகிறார்கள் என்று பார்ப்போம். இதை நான் சவாலாகவே கூறுகிறேன் என்று தெரிவித்திருந்தார்.
இதற்கு பதில் தெரிவித்துள்ள திருப்பனந்தாள் ஆதினம் முத்துக்குமார சுவாமிகள், என்னுடைய ஆதினத்தைப் பொறுத்தவரையில யாராவது கேமரா வைத்துக்கொடுத்தால் வைத்துக்கொள்கிறேன். ஆனால் ஒன்று சொல்லுகிறேன். வெளியிலே நடப்பதுதான் உள்ளே தெரிகிறதே தவிர, உள்ளே நடப்பது வெளியிலே தெரியும்படியாக வைத்துக்கொண்டால் அது வரவேற்கத்தக்கது.
என்னுடைய ஆதினத்தைப் பொறுத்தவரையில் யார் வந்தாலும் எனக்கு நேராகவே தெரியும். எனக்கு எதிராக யாராவது விரோதமாக நடக்கிறார்கள் என்று சந்தேகம் இல்லை. எனவே எனக்கு அது தேவையில்லை. யாராவது கேமரா வைத்துக்கொடுத்தால் பயன்படுத்திக்கொள்கிறேன் என்றார்.
தனி அறையில் கேமிரா பொருத்துவதில் பயமில்லை! நித்திக்கு திருப்பனந்தாள் ஆதினம் பதிலடி!
பதிந்தவர்:
Anonymous
10 May 2012
0 Responses to தனி அறையில் கேமிரா பொருத்துவதில் பயமில்லை! நித்திக்கு திருப்பனந்தாள் ஆதினம் பதிலடி!