Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்ட விவகாரத்தில், ஈடுபட்ட விளையாட்டு வீரகளுக்கு வெறும் தண்டனை மட்டும் போதாது என்று விளையாட்டுத்துறை அமைச்சர் அஜய் மாக்கான் போர்கொடி உயர்த்தியுள்ளார்.

இந்த ஆண்டு ஐ.பி.எல்.கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட, டி.பி.சுதீந்த்ரா, மொனீஷ் மிஸ்ரா, ஸ்ரீவத்சவா, அபியுல்பாலா, அமீத் யாதவ் ஆகிய ஐந்து கிரிக்கெட் வீரர்களுக்கும் போட்டியில் விளையாட ஐ.பி.எல்.நிவாகம் இடைக்கால தடை விதித்திருக்கிறது. இந்த தண்டனை மட்டும் போதாது என்றும், என்ன நடந்தது என்பதை அடிமட்டத்திலிருந்து விசாரிக்க வேண்டும் என்றும், மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அஜய் மாக்கான் கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறியதாவது, இந்திய கிரிக்கெட் வாரியம், ஐ.பி.எல். அமைப்பிலிருந்து முழுமையாக விலகிக்கொள்ள வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்.அதோடு இந்திய கிரிக்கெட் வாரியத்தை தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ் கொண்டுவர வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்.

0 Responses to இந்திய கிரிக்கெட் வாரியத்தை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கொண்டு வரவேண்டும் | அஜய் மாக்கான்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com