அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் தேர்தல் பிரச்சாரம் எதிர் வேட்பாளராக வரக்கூடிய மிற் றொம்னியை சிதறடித்து வருகிறது.
நேற்று பிரச்சாரக் கூட்டமொன்றில் பேசிய அவர் ஐரோப்பிய ஒன்றியமும் தான் முன்னெடுத்துள்ள அமெரிக்காவின் பாதையை பின்பற்றினால் வெற்றி பெறலாம் என்று அறைகூவல் விடுத்தார்.
ஐரோப்பாவில் ஏற்பட்டுள்ள பொருளியல் மந்தம் இன்று அமெரிக்காவின் பொருளாதார சுவர் மீது பலத்த தாக்குதலை ஏற்படுத்தி வருகிறது.
மறுபுறம்..
ஐரோப்பிய ஒன்றியத்தில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி அமெரிக்க பொருளாதார கப்பலை வேகமாக முன்னேற விடாமல் பின்நோக்கி இழுக்கிறது.
ஆகவே அமெரிக்கா எடுத்த அதே முடிவுகளை ஐரோப்பாவும் எடுக்க வேண்டும் அதுவே ஐரோப்பிய வெற்றிக்கு சிறந்த வழியாகும் என்றார்.
அமெரிக்க அதிபரின் இந்த அறைகூவல் அமெரிக்க வாக்காளரிடையே ஒபாமாவுக்கு செல்வாக்கை அதிகரித்துள்ளதாகவும் வரும் தேர்தலில் எதிரணி வேட்பாளராக யார் வந்தாலும் அவரை ஒபாமா முறியடிப்பார் என்று நேற்றைய நள்ளிரவு அமெரிக்கா தெரிவித்தது.
அதேவேளை..
றிப்பப்ளிக்கன் கட்சி வேட்பாளளராக முன்னணி பெற்றுள்ள மிற் றொம்னியின் பிரச்சார விளம்பரமோ அமெரிக்காவே அழிந்துவிட்டது என்பது போன்ற பிரiமையை ஏற்படுத்துவதால் அவருடைய கருத்து அடிபட்டுப் போயுள்ளது.
மேலும் அமெரிக்க தொழிற்சாலைகளை ஒன்றாக இணைத்து, இன்றைய பொருளாதார நெருக்கடிக்குள் இருந்து அமெரிக்காவை வெளியே எடுக்க வழி சொல்லாமல் பராக் ஒபாமாவால் அமெரிக்கா அழிந்துவிட்டது போல தப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் அமெரிக்க பொருளியலின் அடிப்படை விதி பற்றிய விளக்கமும் அவருக்கு போதாமல் இருப்பதாக அமெரிக்க பொருளியல் நோக்கர்கள் தெரிவிக்கிறார்கள்.
சென்ற வாரம் அமெரிக்க அதிபரின் பகடிகள் ஐரோப்பாவில் பேசப்படும் இரண்டாந்தர கேடுகெட்ட தரங்குன்றிய பகடிகள் என்று மிற் றொம்னி கூறியது தெரிந்ததே.
இதற்கான பதிலடிதான் ஐரோப்பா அமெரிக்காவை பின்பற்ற வேண்டும் என்ற பராக் ஒபாமாவின் நேற்றைய மேடைப் பேச்சாகும்.
இதன் மூலம் ஐரோப்பிய ஒன்றியத்தைவிட அமெரிக்கா உயர்ந்தது என்ற உளவியல் கருத்தை அவர் முன் வைத்த காரணத்தால் றொம்னியின் வியூகம் உடைந்து போயுள்ளது.
அமெரிக்காவைவிட ஐரோப்பாவையே பராக் ஒபாமா அதிகம் மதிக்கிறார் என்ற றொம்னியின் வியூகத்தை முளையிலேயே கிள்ளி வீசியுள்ளார் ஒபாமா.
அதேவேளை..
ஒபாமாவின் ஐரோப்பா தன்னைப்போல மாற வேண்டுமென்று ஒபாமா பேசியது வரக்கூடாத நேரத்தில் வந்திருப்பதை ஐரோப்பிய செய்திகள் உணர்த்துகின்றன.
ஓரினச் சேர்க்கையை ஆதரிப்பதாக அறிவிப்பது ஒரு கடதாசியில் கையெழுத்து போடும் வேலை மட்டுமே அதில் யாதொரு சிரமமும் இல்லை.. அதற்காக பெரிய நிதியை ஒதுக்க வேண்டியதில்லை செலவின்றி செய்யக்கூடிய வெத்து வேட்டு வேலை இதுதான் ஒபாமாவின் சாதனை.
இப்படி தெருவில் கிடக்கும் தேங்காயை எடுத்து வழியில் கிடக்கும் பிள்ளையாருக்கு உடைத்து தானே பிள்ளையாருக்கு தேங்காய் உடைத்ததாக புலம்பும் ஒபாமாவின் பாதையில் ஐரோப்பா திரும்ப வேண்டியதில்லை.
ஆணும் – ஆணும், பெண்ணும் – பெண்ணும் ஓரினச் சேர்க்கை செய்யும் அமெரிக்காவின் பாதையில் ஐரோப்பிய ஒன்றியம் செல்ல வேண்டிய அவசியமில்லை என்று எச்சி இலையைப் பறித்த நாய் சீறுவதுபோல சீறியுள்ளது இன்றைய காலை ஐரோப்பா.
பதினெட்டு வயது பெண்களுடன் படுத்துப் புரளும் இத்தாலிய முன்னாள் பிரதமர் பலர்ஸ்கோனி, மாடல் அழகியுடன் கூடல் புரியும் பிரான்சிய அதிபரான ஸார்கோஸி, பழைய மனைவியை அடித்து விரட்டிவிட்டு புதிய மாடல் அழகியை மனைவியாக்கியுள்ள ரஸ்ய புற்றின் என்று ஆண் – பெண் உறவில் ஆசை கொண்டு அலையும் ஐரோப்பிய வீரர்களை அமெரிக்கா பாணி ஓரினச் சேர்க்கைக்கு அழைப்பது ஐரோப்பாவை கடுப்பேற்றியுள்ளது.
0 Responses to அமெரிக்காவை பின்பற்றினால் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் வெற்றி