மதுரையில் (10.05.2012) செய்தியாளர்களிடம் பேசிய நித்தியானந்தா,
ரஞ்சிதாவுடன் இருக்கும் நித்தியானந்தாவை மதுரை ஆதினமாக ஏற்றுக்கொள்ளக் கூடாது என்று சங்கராச்சாரியார் கூறியிருக்கிறார். ஆனால் என் மீது எந்த கொலை வழக்கும் இல்லை. அவர் மீது கொலை வழக்கு உள்ளது.
குற்ற பின்னணி உள்ள அவர் என்னை பற்றி குற்றம் சொல்ல அருகதை இல்லை. அவர்தான் போதை ஊசி போட்டு காஞ்சி பெரியவரை கொன்றார். நான் மதுரை ஆதினத்துக்கு எந்த ஊசியும் போடவில்லை.
என்னை எதிர்ப்பவர்கள் லெட்டர் பேடு ஆதினங்கள். இந்தியாவில் 800 ஆதினங்கள் இருக்கிறார்கள். இதில் 13 ஆதினங்கள் மட்டும் எதிர்ப்பது எடுபடாது. மக்களிடம் ஆதரவு இருக்கிறது.
பணமும், நகையும் நிழல் போல என்னை தேடி வரும். என்னை பற்றி குறை சொன்ன சங்கராச்சாரியார் மீது வழக்கு போடுவேன் என்றார்.
சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் மற்றும் இளையவர் இருவர் மீதும் கொலை வழக்கு புதுச்சேரி நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளபோது,மதுரை ஆதீனம் பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது?இவர்கள் மீதும் பாலியல் குற்றச்சாட்டு வரவில்லையா?. .தி.அரப்பா தமிழன்,மதுரை
சபாஸ் சரியான போட்டி,,,, ஆசாமிகளின் அசிங்கங்கள் அம்பலத்துக்கு வரட்டும்
அவர்களின் வாய் மூலமாகவே.