Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

முள்ளிவாய்க்கால் நினைவேந்தும் மே-18 தமிழீழத் தேசிய துக்க நாளான இன்று இலங்கையின் வான்பரப்புக்குள் உள்நுழையவுள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் வானொலிச்சேவை இலங்கை அரசுக்கு கடும்சீற்றத்தினை ஏற்படுத்தியிருந்த நிலையில் அதனை தடுப்பதற்கு கடும் முயற்சிகளை தீவீரமாக மேற்கொண்டு வருகின்றது.

இலங்கை நேரம் இரவு 8:30 மணிக்கு சிற்றலையூடாக (short-wave) அலைவரிசை 12 250 mhz ல் ஒலிக்கவுள்ள நிலையில் இதனை தடுப்பதற்கு கடும் முயற்ச்சியில் சிறிலங்கா அரசாங்கம் தீவிரமாக இறங்கியுள்ளது.

இலங்கையில் இதனை சீரான முறையில் ஒலிக்காமல் இருபதற்குரிய அலைவரிசை இடையூறுகளை இலங்கை மேற்கொள்ளவும் வாய்ப்புள்ளதாக தெரியவருகின்றது.

இவ் ஒலிபரப்பு தமிழகம் மலேசியா சிங்கப்பூர் உட்பட ஆசிய பிராந்தியத்தில் இதனைக் கேட்கமுடியும்.

தாயகம் - தேசியம் - தன்னாட்சியுரிமை எனும் ஈழத்தமிழர்களின் அரசியல் அபிலாசையின் சனநாயகப் போராட்ட வடிவமாகவுள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் - புலத்துக்கும் நிலத்துக்குமான உறவுப்பாலமாகவும் உலகத் தமிழர்களின் ஈழத்துக்கான குரலை காவிவரும் உணர்வுப்பாலமாகவும் இவ்வானலை ஒலிபரப்பு அமையவுள்ளதென நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.

0 Responses to இலங்கை வான் பரப்பில் தமிழீழ அரசாங்கத்தின் குரல்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com