சிங்கள அரச பயங்கரவாதத்தினால் படுகொலை செய்யப்பட்ட 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ்மக்களை நினைவுகூரும் தமிழினப்படுகொலை நாள் நிகழ்வு, அவுஸ்திரேலியா மெல்பேர்ணில் இன்று உணர்வுபூர்வமாக கடைப்பிடிக்கப்பட்டது.
மெல்பேர்ண் நகரின் மத்தியில் அமைந்துள்ள State Library முன்றலில் இன்று மாலை 5.00மணி முதல் 6.30 மணி வரை இடம்பெற்ற இந்த நிகழ்வில், மெல்பேர்ண் வாழ் தமிழ் மக்களும், தமிழீழத்துக்கு ஆதரவான வேற்றின மக்களும் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில், 2010ஆம் ஆண்டின் Australian of The Year விருதுபெற்ற பேராசிரியர் Patrick McGorry மற்றும் அவுஸ்திரேலியச் செனற் சபையின் உறுப்பினரான John Madigan ஆகியோர் சிறப்புப் பேச்சாளர்களாகக் கலந்துகொண்டு உரையாற்றினர்.
அவுஸ்திரேலியாவுக்கு புதிதாக வந்து புகலிடம் கோருவோருடனான தனது உறவைப்பற்றிக் குறிப்பிட்ட பேராசிரியர் Patrick McGorry, தமிழ் மக்கள் எவ்வளவு துயரங்களை அனுபவித்துள்ளார்கள் என்பதை புரிந்துகொள்ள முடிவதாகக் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில், உரையாற்றிய செனற்றர் John Madigan, சிறிலங்காவில் ஐ.நாவின் மேற்பார்வையுடனான ஒரு சர்வதேச விசாரணையை வலியுறுத்தினார். இந்நிகழ்வின் உரைகளில் இறுதியாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகளில் ஒருவரான டொமினிக் சந்தியாப்பிள்ளை உரையாற்றினார்
இறுதியில் தமிழ் மக்களும் நிகழ்வில் கலந்துகொண்ட வேற்றின மக்களும் உறுதிமொழி எடுத்தனர்.
மெல்பேர்ண் வாழ் மக்களால் உணர்பூர்வமாக நினைவுகூரப்பட்ட தமிழினப் படுகொலை நாள்
பதிந்தவர்:
ஈழப்பிரியா
18 May 2012
0 Responses to மெல்பேர்ண் வாழ் மக்களால் உணர்பூர்வமாக நினைவுகூரப்பட்ட தமிழினப் படுகொலை நாள்