முள்ளிவாய்க்காலிலும் மற்ற இடங்களிலும் ஆயிரக்கணக்கணக்கான தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். அவர்களின் துயரமான மரணங்கள் நம் இதயங்களில் மிக ஆழமாக உறைந்து, நம்மை இன்று கண்ணீர் சிந்தவைக்கின்றன. அவர்கள் எல்லாம் யார்? .அவர்கள் நம் அழகான குழந்தைகள், துணிவு மிகுந்த இளம் வயது மகன்கள் மற்றும் மகள்கள், பாசம் நிறைந்த பெற்றோர்கள் மற்றும் தாத்தா, பாட்டிமார்கள். அவர்களைப் புதைத்த இடம் எங்கு இருக்கிறது என்று கூட நமக்குத் தெரியாது. இன்றைய நாளில் ஒரு சிங்களவன் என்ற முறையில், ஆயிரக்கணக்கான தமிழர்களின் மரணங்கள் மட்டுமின்றி நான் வசிக்கும் சிங்கள நாட்டின் மனித நேயமும் இறந்து விட்டது என்றே எனக்கு எண்ணத் தோன்றுகிறது.
பல ஆயிரக்கணக்கிலான என்னுடைய தமிழ்ச் சகோதரிகள் மற்றும் சகோதரர்களின் கல்லறைகளில் என்னுடைய தேசம் கட்டப்படுகிறது. வியட்நாம் மக்களை அமெரிக்கா கொன்று குவித்தபோது, Martin Luther King தன்னுடைய சொந்த தேசமான அமெரிக்கா தான் இதற்கு காரணம் என்று வருந்தி கண்ணீர் சிந்தினார். உடனலம், சுகாதாரம் மற்றும் கல்வி போன்ற நலத்திட்டங்களுக்கு பணத்தை செலவிடாமல் நம் தேசம் இப்படி செய்கிறதே என்று அவர் கண்ணீர் சிந்தினார்.
தனித்தமிழ் ஈழத்திற்கான போராட்டம் இன்னும் ஓய்ந்த பாடில்லை. ஆனால் மனித நேயம் தோற்றுப்போய்விட்டது. வன்னியில் கொடூரமான முறையில் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். அவர்களின் கோரமான மரணம் தனித்தமிழ் ஈழத்தைக் கொடுத்தால் கூட ஈடு செய்ய முடியாது என்று மனசாட்சி உள்ள ஒவ்வொரு சிங்களவனுக்கும் தெரியும். பூமியில் ஒரு சிறிய கிராமம் போன்று விளங்கும் இந்த நாட்டில், முள்ளிவாய்க்காலில்
21ம் நூற்றாண்டில் மனித நேயம் செத்து விட்ட சம்பவம் சரித்திரப் பிரசித்தி பெற்றுவிட்டது. வன்னியில் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்ட சம்பவம் நீதிக்கு எதிரான கொடுஞ்செயலாக ஆகிவிட்டது. முள்ளிவாய்க்காலில் நடந்த அரசியல் ரீதியான உண்மை எது?
பிரித்தானியக் காலனி ஆதிக்கத்திலும் முள்ளிவாய்க்காலில் தான் கொடூரம் உச்சக்கட்டத்தை அடைந்து, Sri Lankan State (இலங்கை) இல் மக்கள் கோரமாகக் கொலை செய்யப்பட்டனர். 1948ல் சுதந்திரம் கிடைத்த பிறகும், சிங்கள ஆளும் கட்சியினர், மீண்டும் மீண்டும் இந்தக் கொடுஞ்செயலில் ஈடுபட்-
டுக்கொண்டுதான் இருக்கின்றனர். தமிழர்கள் மீதான இந்தப் படுகொலைகள் பற்றிக் கடந்த 60 வருடங்களாக, சிங்களவர்
களுக்கு ஒன்றுமே தெரியாதா? 1983 மற்றும் 2009ல் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதும் அவர்களுக்குத் தெரியாதா? 1983ல் இலங்கை அரசின் காட்டுமிராண்டிக் கொலை வெறியர்களே படுகொலைகளைச் செய்தனர். 2009ல் சில உலக வல்லரசு நாடுகளின் முழு ஆதரவுடன் இலங்கை
இராணுவம் தமிழர்களைக் கொன்று குவித்தது. இந்தப் படுகொலைகளை இலங்கை அரசு தெரிந்தே செய்கிறது. சிங்களவர்களும் மனிதர்கள் தான். இந்த மிருகத்தனமான செயல் பற்றி அவர்கள் என்ன நியாயம் கற்பிக்கப் போகிறார்கள்?
'இந்தக் கொலைகள் எல்லாம் தங்கள் நாட்டின் பாதுகாப்புக் கருதியே' என்று ஒரு வேளை அவர்கள் வாதம் செய்யலாம். அது சரிதானா? இல்லையென்றால் விடுதலைப் புலிகளிடமிருந்து தமிழர்களைப் பாதுகாக்கவே இப்படிச் செய்கிறோம் என்றும் அவர்கள் கூறலாம். ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானைத் தாக்கியதற்கு அமெரிக்காவும் இப்படித்தான் காரணம் கூறுகிறது. பாலஸ்தீனத்தினத்துக்கும் இதே வாதத்தைத்தான் இஸ்ரேல் முன்வைக்கிறது. இலங்கை நாட்டின் இறைமையைக் காப்பாற்ற இத்தகையை படுகொலைகளை செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது என்று இலங்கை அரசு நொண்டிச் சமாதானம் கூறுகிறது. ஐ.நா சபைக்கும் மற்றும் உலக சமூகத்திற்கும் இதுபற்றித் தெரியுமா? எதற்காக இந்தப் படுகொலைகள் நடத்தப்பட்டன என்று சிங்களவர்கள் தெரிவித்துள்ளார்களா? இலங்கை நாட்டைக் காப்பாற்றவே இந்த நடவடிக்கை என்பதே அவர்களின் வாதம். ஆகையால் தான் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டார்கள் என்று அவர்கள் மார்தட்டிக் கொள்கிறார்கள்.
ஒன்றை மட்டும் நான் கூற விரும்புகிறேன். 21 ஆம் நூற்றாண்டில் தமிழ் இனத்தையே பூண்டோடு ஒழிக்கவேண்டும் என்று மிருகத்தனமான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழ் மக்கள் தான் சரியாகத் திட்டமிட்டு தங்கள் எதிர்காலத்தை நிர்ணயிக்க வேண்டும். Martin Luther King ; மற்றும் Nelson
Mandela ஆகியோரின் கருத்துகளை தான் நான் எதிரொலிக்க விரும்புகிறேன். நீதியை நோக்கிய பயணம் நெடியதாக இருந்தாலும் சுதந்திரம் கிடைப்பது வரை அதை நிறுத்தவே கூடாது என்பது தான் அவை. இலங்கை நாட்டில் புத்தர் ஞானோதயம் அடைந்த 2600வது வருடத்தை குதூகலமாகக் கொண்டாடுவர். ஆனால் இந்த வருடம்
மே 18 ஆம் தேதி தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதும் அன்றைய தினம் நினைவில் வரும் என்பது அபத்தமான விஷயமாகும்.
பூமியில் உள்ள அனைத்து உயிரினங்கள் மீதும் அன்பையும், இரக்கத்தையும் கருணையையும் பொழிந்தவர் புத்தர். அவருடைய போதனைகள் பல அரசியல் சாம்ராஜ்யங்களை மாற்றியமைத்தன. பல ஆசிய நாடுகளை ஒருங்கிணைத்தன. நீதி நியாயத்தைத் தழைக்கச் செய்தன. புத்த பிரானின் வழி நடக்கும் இலங்கை நாடு, வன்னியில் கொலை செய்யப்பட்ட தங்கள் அன்பானவர்களின் நினைவாக தமிழர்கள் ஒரு மெழுகுவர்த்தியை கொளுத்தி கண்ணீர் அஞ்சலிசெலுத்தக்கூட அனுமதிதரவில்லை. ஒவ்வொரு மனிதனுக்கும் இழைக்கப்பட்ட அநீதி இது. மனித இனத்துக்கே இது பெரும் வெட்கக்கேடு. நமது தார்மீக மற்றும் மத ரீதியான உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன.
புத்த பிரானின் போதனைகளுக்கு முற்றிலும் இது எதிரானது. தமிழர்கள் மீது இலங்கை அரசின் இந்த கொடுங்கோன்மையான அடக்கு முறையை அனுமதித்தால், சிங்கள சமுதாயம் ஜனநாயகத்தைக் குழிதோண்டிப் புதைத்தது போலாகிவிடும். தமிழர்களைச் சிறையில் அடைப்பதன் மூலம் சிங்களவர்கள் தங்களுக்கே அடிமைச் சங்கிலிகளைப் பூட்டிக் கொள்கிறார்கள். அவர்கள் கேளாக்காதுடனும் பாராமுகத்துடனும் பேசாவாயுடனும் இருக்கக்கூடாது. கடைசி மூச்சு இருக்கும்வரை தங்கள் சுதந்திரமான வாழ்க்கைக்காகத் தங்களை அர்ப்பணித்துக் கொண்ட நம் ஆயிரக்கணக்கிலான தமிழ் சகோதரர்கள் மற்றும் சகோதரிகளுக்கு இன்றைய நாளில் நம் கண்ணீர் அஞ்சலியை செலுத்துவதுடன் மட்டுமன்றி, அவர்களின் வீரதீரச் செயலை நம் வாழ்நாள் முழுவதும் வாழ்த்திப் போற்றுவோம்.அவர்களுடைய வீரமரணத்தை ஓர் ஊன்று கோலாக எடுத்துக்கொண்டு, நீதியை நோக்கிப் பயணித்து, வெற்றி மற்றும் சுதந்திரத்தைப் பரிசாக அடைவோம்.
நன்றி : தாய்வீடு
கலாநிதி ஜூட் லால் பெர்னாண்டோ நீர்கொழும்பில் பிறந்தவர். சிங்கள முற்போக்காளர்களுடனும் 'ஹிரு' பத்திரிகையோடும் பணியாற்றியவர். இப்போது, புலம் பெயர்ந்து அயர்லாந்தில் வாழ்கிறார். இலங்கையில் சமாதானத்துக்கான ஐரிஷ் அவையின் முக்கியமான செயற்பாட்டாளர். ட்ப்ளினில் உள்ள ட்றினிட்டிக் கல்லூரியில் விரிவுரையாளராக இருக்கிறார்.
முள்ளிவாய்க்கால்: ஆழ்ந்த சோகத்திலும் துணிவுடன் போராடிய தருணம் | கலாநிதி ஜூட் லால் பெர்னாண்டோ
பதிந்தவர்:
ஈழப்பிரியா
18 May 2012
0 Responses to முள்ளிவாய்க்கால்: ஆழ்ந்த சோகத்திலும் துணிவுடன் போராடிய தருணம் | கலாநிதி ஜூட் லால் பெர்னாண்டோ