பராக் ஒபாமா பர்தா அணிந்து – காதலித்த கதை பற்றிய செய்திகள் வந்து போக இப்போது றிப்பப்ளிக்கன் வேட்பாளர் மிற் றொம்னியின் இளமைக்காலம் பற்றிய செய்திகள் உலாவரத் தொடங்கியுள்ளன.
கிம்நாசியம் எனப்படும் அட்வாண்ஸ் லெவல் படிக்கும் காலத்தில் இவர் மற்றய மாணவர்களை பகடி வதை செய்யும் வக்கிர மன்னாக இருந்திருக்கிறார்.
மேலும் இவர் ஒரு ஜோக்கராக இருந்து வக்கிரமான பகடிகளை விட்டு மற்றவரை சிரிப்பூட்டும் பேர்வழியாகவும் இருந்துள்ளார்.
பல நண்பர்களுடன் கூட்டாக சேர்ந்து கொண்டு தனித்து நிற்கும் இயலாத மாணவரை ஓரினச் சேர்க்கையாளர் என்று கேலி செய்து, மட்டந்தட்டி, அவர்களுடைய தலை முடியை வெட்டும் கொடிய மாணவனாகவும் இருந்துள்ளார்.
இந்தச் சம்பவத்தை அவரால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் வெளியிட்டதால் ஆடிப்போன மிற் றொம்னி பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டுள்ளார்.
ஆனால்…
பாடசாலைகளில் வக்கிரமான பகடி வதை செய்த ஒருவரை மன்னித்து, இரக்கம் காட்டி செங்கம்பளம் விரித்து, வெள்ளை மாளிகைக்கு அனுப்பி வைக்க அமெரிக்க வாக்காளர் அடியோடு விரும்பமாட்டார்கள்.
இளமைக்காலத்தில் மிற் றொம்னி செய்த சிறிய விளையாட்டுப்பிள்ளைத் தவறு இன்று அவருடைய அதிபர் பதவிக்கே வேட்டு வைக்கப்போகிறது.
குற்றம் செய்யும்போது மௌனமாக பார்த்துக் கொண்டிருக்கும் விதி – குற்றம் செய்யாத போது முன்னால் வந்து நிற்கும் என்ற கருத்து மிற் றொம்னி வாழ்வில் நடந்துள்ளது.
முற்பகல் செயின் பிற்பகல் விளையும் – தமிழ் பழமொழி
இப்போது, அமெரிக்க அதிபர் தேர்தலில் மிற் றொம்னிக்கு எதிராக ஊடகங்கள் தொழிற்படும் பருவமாகும்.
மேலும் மூன்று மாதங்களில் ஒபாமாவை வீழ்த்தி மிற் றொம்னியை உயர்த்தி பின் இறுதித் தேர்தலில் ஒபாமாவை வெற்றியடைய செய்வதற்கு ஏற்றவாறு அமெரிக்க ஊடகங்கள் வியூகம் வகித்திருப்பது தெரிகிறது.
அலைகள்
0 Responses to மிற் றொம்னி ஒரு வக்கிர பகடி வதை மன்னன் | அமெரிக்க தேர்தல்