ஈராக் போரின்போது டேனிஸ் படைத்துறையில் உள்ள உயர்நிலை அதிகாரிகள் ஐந்து பேர் மிகவும் ஆபத்தான குற்றச்சாட்டை எதிர் நோக்கியுள்ளனர்.
ஈராக் போர்க்களத்தில் நின்ற டேனிஸ் படைகள் பயங்கரவாத சந்தேக நபர்கள் என்று 158 ஈராக்கியரை மட்டும் கைது செய்து அமெரிக்கப் படைகளிடம் ஒப்படைத்ததாக இவர்கள் பாராளுமன்றத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர்.
ஆனால் பின்னர் படைத்துறை அமைச்சர் கொடுத்த தகவல் ஒன்று அந்தத் தொகை 500 பேர் என்று தெரிவித்தது.
ஆகவே 500 பேரை கைது செய்துவிட்டு வெறும் 158 பேர் என்று கூறி அதி உச்ச அதிகாரம் படைத்த பாராளுமன்றத்திற்கு பொய் உரைக்க வேண்டிய தேவை என்ன..?
இந்த அதிகாரிகள் டேனிஸ் பாரளுமன்றத்தின் கீழ் பணியாற்றினார்களா இல்லை வேறு யாருக்காவது பணியாற்றினார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.
பாராளுமன்றத்திற்கு தவறான தகவல் கொடுத்த தான்தோன்றித்தனமான செயல் நிரூபிக்கப்பட்டால் பாரதூரமான சிக்கலை இந்த ஐந்து உயர் அதிகாரிகளும் சந்திக்க நேரிடும்.
இது இவ்விதமிருக்க இன்று வெளியான சுவீடிஸ் விமான விபத்து அறிக்கை படிப்போரின் நெற்றிப் புருவங்களை கேள்விக்குறிபோல வளைத்துள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஐந்து உயர் நிலை படை அதிகாரிகளுடன் சென்ற நோஸ்க் இராணுவ விமானம் சுவீடன் மலைப்பகுதியில் மோதி ஐவரும் மரணித்தது தெரிந்ததே.
இந்த விமானம் காலநிலை சீர் கேட்டால் மலை முகட்டில் மோதியதாகவும் கருதப்பட்டது.
ஆனால் இப்போது வெளியான தகவல்களின்படி மலை உச்சிக்கு தாழ்வாக பறக்கும்படி உத்தரவு வழங்கப்பட்டதாலேயே விமானம் தாழ்வாக பறந்து உத்தரவு வழங்கப்பட்ட மூன்றாவது நிமிடமே மலையில் மோதியிருக்கிறது.
ஆக இவர்கள் மலையில் மோதும்படியாக தகவலை யார் கொடுத்தார்கள்… ஏன் கொடுத்தார்கள் என்பதே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
விமானம் காலநிலையினால் விபத்தை சந்திக்கவில்லை என்றும் அது தெரிவிக்கிறது.
மறுபுறம்..
இன்று அதிகாலை டென்மார்க் கோப்பன்கேகன் சர்வதேச விமான நிலையத்தில் பறப்பெடுத்த போயிங் 737 இரக விமானமொன்று அவசரமாக தரையிறக்கப்பட்டது.
இரண்டு கடற்பறவைகள் ( Mågeer ) விமானத்தின் மோட்டருக்குள் சிக்குப்பட்டதால் உடனடியாக விமானம் தரையிறக்கப்பட்டது.
அலைகள்
0 Responses to ஈராக் போர் : பாராளுமன்றத்திற்கு பொய்யுரைத்த படைத்துறை அதிகாரிகள்