Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஆபிரிக்காவின் உகண்டா நாட்டை சேர்ந்த யோசப் கொனி பற்றி அறியாதவர்கள் இருக்க முடியாது.

கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியான குறும்படமொன்று இந்தக் கொடியவனை உலகின் முன்னால் அம்பலமாக்கியது.

சிறுவரை படையணியில் சேர்த்து கொடுமைகள் புரிந்த இவன் சர்வதேச போர்க் குற்றவாளியாக கருதப்பட்டு தேடப்பட்டு வருகிறான்.

இவன் தற்போது எங்கு உலாவுகிறான் என்ற தடயம் தமக்கு கிடைத்துள்ளதாக ஐ.நா அறிவித்துள்ளது.

ஆனால் :

கொனியும் – கையாட்களும் எங்கே இருக்கிறார்கள் என்ற தகவல் கிடைத்த மறுகணமே அனைவரும் கம்பி நீட்டிவிடுவார்கள்.

வீரப்பன் பாணியில் காட்டு வழியாக இரண்டு நாட்களுக்கு ஓரிடம் என்ற அடிப்படையில் இடம் மாறி வருவதால் உடனடியாக கைது செய்ய முடியாமலிருக்கிறது.

அதேவேளை :

இவர் நடமாடும் தடயம் கிடைத்துவிட்டதாக ஐ.நா அறிவித்திருப்பதல் இதற்குள் கதை முடிந்துவிட்டதா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

மறுபுறம் :

அமெரிக்காவின் குவான்ரநோமா சித்திரவதைக் கூடம் போல வடகொரியாவிலும் சித்திரவதைக் கூடங்கள் பரவலாக இருப்பதாக இன்று வெளியான தென்கொரிய மனித உரிமை கழக அறிக்கை தெரிவிக்கிறது.

எந்த இடத்தில் எத்தனைபேர் அரசியல் எதிரிகளாக கருதப்பட்டு சித்திரவதை செய்யப்படுகிறார்கள் என்பதை அட்டவணைப்படுத்தி வெளியிட்டுள்ளார்கள்.

வழமைபோல வட கொரியா இதை மறுத்துள்ளது.

மேலும் :

நோர்வேயில் 77 பேரை கொன்று விசாரணைகளை சந்தித்து வரும் ஆனர்ஸ் பிகார்ஸ் பிறீவிக் மீது சப்பாத்து வீசப்பட்டது.

எனது சகோதரனை கொன்று விட்டாயே கொலைகாரா நீ நரகக்குழிக்கு போ என்றபடி நீதி மன்றத்தில் இருந்த ஒருவர் கதறியபடியே சப்பாத்தைக் கழற்றி வீசினார்.

இவர் நீதிமன்றத்தை விட்டு வெளியேற்றப்பட்டார்.

தற்போது ஆனார்ஸ் நடாத்திய படுகொலைகளில் இருந்து தப்பியோருடைய சாட்சியங்கள் பதியப்படுவது குறிப்பிடத்தக்கது.

கண்ணீர் மல்க பாதிக்கப்பட்டோர் சாட்சியமளித்து வருகிறார்கள்.

அலைகள்

0 Responses to வீரப்பன் பாணியில் வேப்புக் காட்டும் யோசப் கொனி | சப்பாத்து வீச்சு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com