நித்தியானந்தாவிற்கு எதிராக மே 27ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக மதுரை ஆதீனம் மீட்புக் குழு தலைவர் நெல்லை கண்ணன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய நெல்லை கண்ணன், ‘’மதுரை ஆதீனம் மடத்தின் இளைய ஆதீனமாக நித்தியானந்தா நியமிக்கப்பட்டது ஆதீனம் மரபுக்கு எதிரானது; அந்த பதவிக்கு நித்தியானந்தா எந்த தகுதியும் இல்லாதவர்; அவர் ஆதீனமாக பொறுப்பேற்பதற்காக தீட்சையும் பெறாதவர்; இது தொடர்பாக மதுரை ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடர முடிவு செய்துள்ளோம்; அதுமட்டுமின்றி பல்வேறு ஆதீனங்கள் பங்கேற்கும் கண்டன பேரணி மே 27ம் தேதி நடத்தப்பட உள்ளது’’என்று தெரிவித்துள்ளார்.
0 Responses to நித்திக்கு எதிராக கண்டன பேரணி