தமிழீழ தேசத்தில் நடைபெற்ற தமிழினப்படுகொலையின் 4ம் ஆண்டு மே 18 போர்க்குற்ற நாள் Albert Campbell (Scarborough Town Centre) சதுக்கத்தில் வழமை போன்று கனடியத் தமிழர் தேசிய அவையால் நடாத்தப்படுகின்ற போர்க்குற்ற நாள் நிகழ்வில் இம் முறை முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டு உரையாற்றவுள்ளார்கள் என்பதை மக்களுக்கு அறியத்தருகின்றார்கள்.
இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலையையும், போர்க்குற்றத்தையும் உலக சமூகத்திடம் கொண்டு செல்லவும், நீதி விசாரணைக்கு உற்படுத்தவும் முன்நின்று உழைக்கின்ற முக்கிய பிரமுகர்கள் பலர் பல பயனுள்ள கருத்துக்களை மக்களுக்குத் தரவுள்ளனர். பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினரும், அனைத்துக் கட்சித் தமிழ் விவகாரங்களை முன்னெடுக்கின்ற பாராளுமன்ற கூட்டுகுழுவின் உபதலைவருமான Ms. Siobhain McDonagh அவர்கள் உறையாற்றவுள்ளார். இவர் முழுக்க முழுக்க இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றத்தை மையப்படுத்தி முன்நின்று உழைப்பவர்.
அதே போன்று போர்க்குற்றத்தை மையப்படுத்தி முன்நின்று உழைக்கும் உலகத்தமிழர் பேரவையின் தலைவர் அருட்தந்தை எஸ்.ஜே. இமானுவேல் அடிகளாரும் சிறப்புரையாற்றவுள்ளார் மற்றும் கனடிய அனைத்துக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டு உரையாற்றவுள்ளார்கள்.
இவர்கள் அனைவரது உரைகளும் போர்க்குற்றத்தை மையப்படுத்தி முன்நின்று உழைத்து வரும் கனடிய தேசத்தோடு நாமும் கை கோர்த்து சேர்ந்து உழைப்பதற்கு வலுச்சேர்க்கும் என்பது உறுதி.
மே 18, போர்க்குற்ற நாளில், இலங்கையின் போர்க்குற்றத்தை இனி எப்படி மிகப்பெரிய மாற்றத்துடன் நகர்த்த முடியும் என்பது பற்றியும், தமிழீழ மக்களின் விடியலுக்கு வீச்சாக எப்படி உழைக்கவேண்டும் என்பது பற்றியும் உறையாற்றவுள்ளார்கள்.
இவர்கள் அனைவரது உழைப்புக்கும் ஒன்றுபட்டு உரம் சேர்ப்பதற்கு மண்ணையும், மக்களையும், மாவீரர்களையும் மனதில் நிறுத்தி Albert Campbell (Scarborough Town Centre) சதுக்கத்தில் அணியணியாய் ஆயிரமாயிரமாய் ஒன்று கூடுவோம்.
மேலதிக தொடர்புகளுக்கு: கனடிய தமிழர் தேசிய அவை
தொலைபேசி: 1.866.263.8622 - 416.646.7624
மின்னஞ்சல்: info@ncctcanada.ca
0 Responses to கனடியத் தமிழர் தேசிய அவையால் நடாத்தப்படும் மே 18 போர்க்குற்ற நாள்