Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஈழத் தமிழர்களுக்காக கருணாநிதி மீண்டும் ஏற்படுத்தியுள்ள டெசோ அமைப்புக்கு, அழைப்பு இல்லாத நிலையிலும், ஆதரவு தெரிவித்து பரபரப்பைக் கிளப்பி இருக்கிறார் திருமாவளவன்.

விடுதலைச்சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தமிழக ஏடான ஜூனியர் விகடனுக்கு வழங்கிய செவ்வி

கேள்வி: கருணாநிதி அழைக்காதது வருத்தமா?

பதில்: ஈழத் தமிழர்களின் நலனுக்கான அமைப்பு எதுவாக இருந்தாலும், அந்த அமைப்பின் நடவடிக்கைகளை வரவேற்கிறோம், பாராட்டுகிறோம்.

ஈழத்துக்கு ஆதரவாக சர்வதேச சமூகத்தின் ஆதரவைத் திரட்ட​வேண்டி இருக்கிறது. குறிப்பாக, பொதுவாக்கெடுப்பு என்பது நாங்கள் நீண்டகாலமாகவே சொல்லிவரும் கருத்துதான். அதை டெசோ மூலமாகச் சொல்வதால் வரவேற்கிறேன்.

மற்றபடி, அழைப்பு இல்லை என்பது எனக்கு வருத்தம் இல்லை. ஆனால், ஏன் என்னை அழைக்கவில்லை என்ற கேள்வி மட்டும் இருக்​கிறது.

கேள்வி: விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைத் தள்ளி வைப்பதற்காக காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து தி.மு.க. செயலாற்றுகிறதா?

பதில்: தமிழ் ஈழத் தலைவர் பிரபாகரன் அவர்களின் தாயார் இறந்த போது நான் இலங்கைக்குப் போனேன். அப்போது, கொழும்பு விமான நிலையத்தில் இருந்து என்னைத் திருப்பி அனுப்பினார்கள்.

விடுதலைச் சிறுத்தைகளின் நிலைப்பாடு என்ன என்பது ராஜபக்சவுக்குத் தெரியும். அதனால் உள்ளே விட​வில்லை.

அதேமாதிரி, இலங்கைக்குப் போன நாடாளுமன்ற உறுப்பினர் தூதுக்குழுவில் என்னைப் புறக்கணித்தார்கள்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, விடுதலைச் சிறுத்தைகளும் காங்கிரஸ் கூட்டணியில் இருக்கிறது. காங்கிரஸ் கட்சியில் ஐந்து பேரைப் போட்டவர்கள், எங்களில் ஒருவரைப் போட்டிருக்கலாம். எங்களைத் திட்டமிட்டுப் புறக்கணித்தார்கள்.

கலைஞர் டெசோ உருவாக்குகிறார். சுபவீக்கு அழைப்பு போகுது, வீரமணிக்கு அழைப்பு போகுது. ஆனால், நாங்கள் புறக்கணிக்கப்படுகிறோம்.

ராஜபக்சவால் தடுக்கப்​படுவது, காங்கிரஸால் புறக்கணிக்கப்படுவது, டெசோ​வில் இணைக்கப்படாதது எல்லாமே நேர்கோட்டில் இருக்கிறது.

இதில் இருந்து எங்கள் நிலையை உலகத் தமிழர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

கேள்வி: சோனியாவை எதற்காக சந்தித்தீர்கள்?

பதில்: குடியரசுத் தலைவர் வேட்பாளருக்கு ஆதரவு கேட்டு, என்னை அழைத்துப் பேசினார். தலித் கிறிஸ்த​வர் ஒருவரை குடியரசுத் தலைவராக்க வேண்டும் என்ற எங்களின் கோரிக்கையைச் சொன்னேன்.

மேலும் ஈழத் தமிழர் பிரச்சினைக்கும் அரசியல் தீர்வு காணுமாறு கேட்டுக்கொண்டேன். இரண்டையும் கவனத்தில் கொண்டுள்ளதாகச் சொன்னார்.

கேள்வி: இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்துக்கு மாற்றாக, தி.மு.க-வுக்கு ஆதரவாக, ஈழத் தமிழர் வாழ்வுரிமை இயக்கம் ஒன்றைத் தொடங்கினீர்கள்? அது என்ன ஆனது?

பதில்: முள்ளிவாய்க்கால் படுகொலை நடந்த சமயத்தில், உலகத் தமிழர்கள் சோர்வடைந்த நேரத்தில் விடுதலைச் சிறுத்தைகள், தி.க., சுப.வீ. இணைந்து ஒரு பிரசார இயக்கமாக, ஈழத் தமிழர் வாழ்வுரிமை இயக்கம் தொடங்கினோம்.

அது, இலங்கைத் தமிழர் பாது​காப்பு இயக்கத்துக்கு மாற்று அல்ல. அந்த இயக்கம் கூடுவதற்கான சூழல் இப்போது இல்லை. என்றார்.

0 Responses to கருணாநிதி அழைக்காதது வருத்தமா? 'டெசோ' குறித்து திருமாவளவன் விளக்கம்! | ஜூனியர் விகடன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com