Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மதுரை ஆதீனத்திற்கு இளைய மடாதிபதியாக நித்யானந்தா நியமிக்கப்பட்டதை எதிர்த்து, இந்து மக்கள் கட்சி உள்பட பல அமைப்புகள் இணைந்து மதுரை ஆதீனத்தை மீட்க மீட்புக் குழு என்ற அமைப்பை உருவாக்கியுள்ளது.

இக்குழுவில் இணைந்துள்ள கட்சி மற்றும் அமைப்புகளின் தலைவர்கள் நாளை மதியம் மதுரையில் ஒன்று கூடி மதுரை ஆதீனத்தை எவ்வாறு மீட்பது என்று ஆலோசிக்க உள்ளனர் என்று மீட்புக் குழுவினர் கூறியுள்ளனர்.

மேலும், மீட்புக் குழு அமைத்தது குறித்து மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய நெல்லைக் கண்ணன், நித்யானந்தாவைக் கைது செய்தால்தான் அவரிடம் சிக்கியுள்ள அருணடிகிரி நாதரை மீட்க முடியும். அவர் அப்போதுதான் உண்மையை சொல்ல முடியும் என்றார்.

மேலும், கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இருக்கும் போது நித்யானந்தாவை மதுரை ஆதீனமாக நியமித்தது தவறு என்றும், அவரிடம் இருந்து மதுரை ஆதீனத்தை மீட்கும் வரை இந்த மீட்புக் குழு ஓயாது என்றும் கூறியுள்ளார்.

0 Responses to மதுரை ஆதீனத்தை மீட்க மீட்புக் குழு அமைப்பு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com