யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண் வைத்தியர் ஒருவர், தனக்கு தானே சிகிச்சை செய்து கொண்ட நிலையில் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் சிலாபத்தில் நேற்று பிற்பகல் 1.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இதில் வடமராட்சி வியாபாரி மூலையைச் சேர்ந்த வைத்தியரான திருமதி பிரணவன் நீராயா வயது 27 என்ற பெண் வைத்தியரே மரணமானவராவார்.
இவர் முட்டு வருத்தம் என தனக்கு தானே தொடர்ச்சியாக வைத்தியம் செய்து வந்ததாக தெரிவிக்கப்படுகின்ற நிலையிலேயே தீடீரென்று மரணமாகியுள்ளார்.
இவர் தன்னோடு வேலை செய்த தமிழ் வைத்தியரை திருமணம் செய்து 54 நாட்களே கடந்துள்ள நிலையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கணவனும் மனைவியுமாக வைத்தியசாலையில் பணி புரிந்து வருகின்றனர்.
இவரது சடலம் தற்போது யாழ்ப்பாணத்திற்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
பரு/ ஹாட்லிக் கல்லூரி பழைய மாணவர் சங்க (தாய் சங்கம்) தலைவர் திரு.மு.சிவநேசன்(முகாமையாளர்- மக்கள் வங்கி) அவர்களின் அருமைப் புதல்வியும் ஆவார்.
தனக்கு தானே சிகிச்சை செய்து கொண்ட யாழைச் சேர்ந்த பெண் வைத்தியர் திடீர் மரணம் | படங்கள் இணைப்பு
பதிந்தவர்:
தம்பியன்
17 May 2012
0 Responses to தனக்கு தானே சிகிச்சை செய்து கொண்ட யாழைச் சேர்ந்த பெண் வைத்தியர் திடீர் மரணம் | படங்கள் இணைப்பு