முள்ளிவாய்க்கால் மூன்றாமாண்டினை நினைவேந்தும் வகையில், லண்டன் - பாரிஸ் நகர வீதிகளில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை பரப்புரை ஊர்திகள் உலாவந்த வண்ணமுள்ளன.
முள்ளிவாய்க்கால் இன்படுகொலையினை வெளிப்படுத்தியும், ஈழத்தமிழர்களின் நியாயமான உரிமைப் போராட்டத்தினை முன்னிறுத்தியும் இவ்வூர்திகள் உலாவருகின்றன.
பாரிஸ் நகரின் பல பாகங்களெங்கும் நகரும் ஊர்தியினை பிரான்ஸ்-தமிழர் நடுவம் ஏற்பாடு செய்துள்ளது.
இன்று பாரிஸ் ரொக்கர்றோ மனித உரிமைச் சதுக்கத்தில், முள்ளிவாய்க்கால் இனவழிப்பு நாளினை நினைவேந்தும் மாபெரும் நினைவெழுர்ச்சி நிகழ்வு மாலை இடம்பெறுவுள்ள நிலையில், பாரிஸ் வீதியெங்கும் உலாவரும் இந்த ஊர்தி பலரது கவனத்தினைப் பெற்றுள்ளது.
இதேவேளை லண்டன் வீதிகளில் உலாவரும் பரப்புரை ஊர்தியானது மே-18 தமிழீழத் தேசிய துக்க நாளென்ற வாசகங்களுடன் நகர்ந்து வருகின்றது.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகளின் ஒருங்கிணைப்பில் உலா வரும் இவ்வூர்தியின் உள்ளே, பரப்புரை கையேடுகள் - துண்டுப்பிரசுரங்கள் என மக்கள் உள்சென்று அறிந்து கொள்ளும் வண்ணம் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
லண்டன் - பாரிஸ் வீதிகளில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை பரப்புரை ஊர்திகள்
பதிந்தவர்:
தம்பியன்
17 May 2012
0 Responses to லண்டன் - பாரிஸ் வீதிகளில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை பரப்புரை ஊர்திகள்