Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கூச்சம் இல்லாமல் பொய்கள் சொல்வதும் வெட்கம் இல்லாமல் வேடிக்கை காட்டுவதும் கலைஞர் கருணாநிதிக்குக் கைவந்த கலை. வசனம் எழுதி வாழ்க்கையைத் தொடங்கியவர் அதே வசனங்கள் இன்னமும் கை கொடுக்கும் என்று நினைக்கிறார். இவ்வாறு வைகோ விகடனுக்கு வழங்கிய பேட்டியில் ஆவேசமாக தெரிவித்தார்.
80-களின் தொடக்கக் காலத்தில் தமிழ்நாட்டு மக்களின் இதயங்களில் எல்லாம் 'ஈழம்’ என்ற சொல்லை விதைத்த 'டெசோ’ அமைப்பின் கழுத்தை நெரித்துக் கொன்றவரே கருணாநிதிதானே! 24 ஆண்டுகளுக்கு முன் அவராலேயே கொன்று புதைக்கப்பட்ட உடலை மீட்டெடுத்து... பாடம் பண்ணி... படம் காட்ட வருகிறார். இது டெசோ அல்ல. வெறும் ஷோ!

யாழ்க் கோட்டையில் புலிக் கொடி பறந்தபோது வேடிக்கை பார்த்த அவர்...

வடக்கு மாகாணத்திலும் கிழக்கு மாகாணத்திலும் முக்கால் நிலப்பரப்பில் நிர்வாகத்தைத் தமிழீழ அரசாங்கம் நிர்வகித்தபோது கண்டுகொள்ளாமல் இருந்த அவர்...

தரைப் படை, கப்பல் படை, விமானப் படை மூன்றும் பிரபாகரனுக்கு இருந்தபோது வயிற்றெரிச்சல் பட்ட இவர்...

ஆண்களுக்கு இணையாகப் பெண்களும் களம் நின்ற காலத்தில் கண்டுகொள்ளாதவர்...

உலகம் பயன்படுத்தும் எல்லா ஆயுதங்களையும் பயன்படுத்திப் போரிட்டு நின்ற காலத்தில் அதை ஒரு பொருட்டாகக் கருதாதவர்...

இன்றைக்குத் தமிழ் ஈழம் அமையப் பாடுபடுவேன் என்று பேசுவது பச்சை சந்தர்ப்பவாதம். கருணாநிதிக்கு இது இயல்பானது.

நான்காவது கட்ட ஈழப் போர் என்பது 2006-2009 காலகட்டத்தில் ஜனாதிபதி ராஜபக்சவினால் நடத்தப்பட்ட இரத்த வெறியாட்டம். இன்றைக்கு 'டெசோ’வை உயிர்த்தெழ வைத்திருக்கும் கருணாநிதி, அன்று தமிழன் சாகாமல் இருக்கச் செய்த காரியம் என்ன?

தமிழ் ஈழத்துக்காகக் குரல் கொடுத்தாரா? கருணாநிதிக்கு தைரியம் இருக்குமானால், நேர்மை இருக்குமானால், 2008 நவம்பர் மாதம் முதல் ஆட்சியைவிட்டு இறங்கியது வரை ஈழப் பிரச்னை குறித்து பேசியது, எழுதியது அனைத்தையும் பகிரங்கமாக வெளியிடட்டும்.

தமிழனுக்கு எதிராகப் பேசினார். தமிழீழக் கொள்கைக்குத் துரோகம் இழைத்தார்.

ஈழத் தமிழர்களின் காவல் அரணாக இருந்த விடுதலைப் புலிகளைப் பழித்தார்.

இலங்கை அரசோடு இணைந்து நாசகாரச் செயல்களுக்கு உடந்தையாக இருந்த மன்மோகன் - சோனியா கூட்டத்துக்கு ஆதரவாக இருந்தார்.

இந்தப் பாவத்துக்கு கருணாநிதியால் பரிகாரம் காணவே முடியாது.

தமிழர்கள், கருணாநிதியின் டெசோவை சீரியஸாக எடுத்துக்கொள்ளவே இல்லை. அவர் ஆண்டுக்கு ஒருமுறை கதை வசனம் எழுதும் படங்களைப் போலவே ப்ளாப் ஆகும் படங்களில் ஒன்று இது.

0 Responses to ஈழத்தை விதைத்த 'டெசோ’ அமைப்பின் கழுத்தை நெரித்துக் கொன்றவரே கருணாநிதிதான்! | வைகோ

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com