ஆணும், ஆணும் அல்லது பெண்ணும் பெண்ணும் மணம் முடிக்கும் ஓரின சேர்க்கை திருமணங்களை அங்கீகரிப்பதாக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இன்று அறிவித்துள்ளார்.
இவருடைய அறிவிப்பு கேட்டதும் இடியேறு கேட்ட நாகம் போல துடித்தெழுந்த றிப்பப்ளிக்கன் கட்சி வேட்பாளர் மிற் றொம்னி அதை எதிர்த்து அறிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்காவில் ஓரினச் சேர்க்கை என்பது இன்று வகைதொகையற்று பெருகி, புழுத்து கிடக்கும் நிலையில் ஒபாமாவின் இந்த அறிவிப்பு அவருடைய தேர்தல் வெற்றிக்கான துரும்புச் சீட்டாக அமையும் என்று தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை திருமணமாகாத இளம் பெண்களும், ஆண்களும் இத்தகைய ஓரின சேர்க்கை திருமணங்களை இயல்பாக எதிர்ப்பார்கள், காரணம் அவர்களுக்கு வாழ்க்கைத் துணையை தேடுவது மேலும் சிரமாகும்.
இதன் காரணமாக பராக் ஒபாமாவுக்கு விழக்கூடிய வாக்குகளில் கணிசமான அளவு பிளவு ஏற்படும் என்று கோப்பன்கேகன் பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் சற்று முன்னர் தொலைக்காட்சிக்கு கருத்துரைத்தார்.
ஆனால் இத்தகைய பிரச்சனைக்கு தீர்வு காணும் இடுப்புப்பலம் இதுவரை எந்த அமெரிக்க அதிபருக்குமே வரவில்லை ஆனால் ஒபாமாவுக்கு அந்த துணிச்சல் வந்திருக்கிறது, இது அவருக்கு வெற்றியைத் தரும் என்று ஐந்து அமெரிக்க மாநிலங்களில் இருந்து ஓரினச் சேர்க்கையாளர் கூறுகிறார்கள்.
இப்படி வாராவாரம் தேர்தல் அதிரடிகளை வெளியிடும் பராக் ஒபாமா கடைசித்துரும்பு சீட்டாக குவாண்டநோமோ சிறைக்கூட விவகாரத்தை வைத்துள்ளார்.
வரும் நவம்பருக்குள் குவான்டநோமோ சிறைக்கூடம் மூடப்பட்டு பயங்கரவாத சந்தேக நபர்களை அந்தந்த நாடுகளிடம் அவர் ஒப்படைக்க வாய்ப்புள்ளது.
கடந்த தேர்தலில் கியூபாவில் உள்ள குவான்டநோமோ சிறைக்கூடத்தை மூடுவேன் என்று அறிவித்த ஒபாமா இன்றுவரை அதைச் செய்யவில்லை.
ஏன் செய்யவில்லை..
கைதிகள் விடுதலையாகி வெளியே சென்றால் அமெரிக்க சித்திரவதை பற்றிய தகவல்களை அவர்கள் கசிய விட்டுவிடுவார்கள் இதனால் அமெரிக்கா பெரும் தர்ம சங்கடத்தை சந்திக்க நேரிடும்.
எனவே தேர்தல் நெருங்கும் கடைசி நேரத்தில் அதை மூடி அதனால் வரும் விமர்சனங்களை தனது இரண்டாவது ஆட்சிப் பருவத்தில் எதிர் கொள்ள வாய்ப்புள்ளது.
இதற்கு ஆதராமாக இன்று இரண்டு சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.
அமெரிக்க சி.ஐ.ஏ தலைவர் யொய்ச றொட்றிக்கோ பீ.பீ.சிக்கு வழங்கிய செவ்வியில் அமெரிக்க படையினர் தம்மிடம் அகப்பட்டவர்களை தண்ணீரில் மூழ்கடித்து செய்யும் மோசமான சித்திரவதைகளை செய்ததாக ஒப்புக் கொண்டுள்ளார்.
இதற்கான 72 வீடிஓ படங்கள் தன்னிடம் இருப்பதாகக் கூறிய அவர் ஆட்களை அடையாளம் காட்டாத தெளிவற்ற சில ஒளி நாடாக்களை வழங்கினார்.
சித்திரவதை செய்த அமெரிக்க படையினரை அவர் காப்பாற்ற முயன்றதாக இன்றைய காலைச் செய்திகள் தெரிவிக்கின்றன.
ஆனால் இதற்குள் மறைந்துள்ள உண்மை, குவான்ரநோமா மூடப்படப் போகிறது, சித்திரவதை செய்த பலர் தண்டிக்கப்படப் போகிறார்கள் என்பதாகும்.
மேலும்..
பின்லேடனின் ஐரோப்பிய வலது கையாக தொழிற்பட்ட அபு கட்டா என்ற பயங்கரவாதியை பிரிட்டன் அவர் பிறந்த ஜோர்டான் நாட்டுக்கு நாடு கடத்த இருப்பதாக இன்று அறிவித்துள்ளது.
இவர் மீதான மேலதிக விசாரணைகள் அங்கு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது, வரும் கோடை ஒலிம்பிக் போட்டிகள் பிரிட்டனில் ஆரம்பிக்க முன்னர் இவர்; நாடுகடத்தப்படுவார்.
இந்த நாடுகடத்தல் பரிசோதனை குவான்ரநோமா கைதிகளின் நாடு கடத்தலுக்கு ஒரு வெள்ளோட்டமாக அமைய வாய்ப்புள்ளது.
அபு கட்டாவை அனுப்பி ஜோர்டானுடன் பிரிட்டன் வைக்கும் நல்லுறவு பிரிட்டனின் சித்திரவதைகளை எப்படி அம்பலத்திற்கு கொண்டு வரமாட்டோதோ அதுபோல அமெரிக்காவின் சித்திரவதைகளும் அம்பலத்திற்கு வாரமல் போக வாய்ப்புண்டு.
ஆக..
வன்னியில் 2009 மே 17 உண்மைகள் புதைக்கப்பட்டதுபோல குவான்டநோமா உண்மைகளும் புதைந்து போகும், சி.ஐ.ஏ தலைவர் கூறுவது போல ஒளிநாடாக்கள் தெளிவற்று இருக்கும்.
உலகம் சுழலும்…
வரும் நவம்பர் 6ம் திகதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடக்கவுள்ளது, அதற்குள் பல கூத்தாட்டங்கள் அரங்கேறலாம்.
அலைகள்
0 Responses to ஓரினச் சேர்க்கைக்கு ஒபாமா ஆதரவு