Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வடக்கு இத்தாலியில் உள்ள பொலோனா நகரத்தில் இடம் பெற்ற நில நடுக்கத்தில் ஐந்துபேர் மரணித்துள்ளார்கள்.

நில நடுக்கத்தின் அளவு 5.9 ரிக்டர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது, ஏராளமானோர் காயமடைந்துள்ளார்கள்.

காயப்பட்டவர்கள் தரும் தகவல்களின்படி பலர் இடிபாடுகளுக்கிடையில் சிக்குப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறார்கள்.

நில நடுக்கம் சுமார் 20 விநாடிகள் தொடர்ந்து நீடித்ததாக நில நடுக்க சம்பவம் நடந்த இடத்திற்கு 35 கி.மீ தொலைவில் உள்ள நில நடுக்க அளவீட்டு மையம் தெரிவிக்கிறது.

மேலும் நேற்று மாலை வடக்கு இத்தாலியில் உள்ள மிலோனா நகரத்தில் இலேசான நில நடுக்கம் உணரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நேரம் செல்லச் செல்ல சேத விபரம் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

இத்தாலியில் கடந்த 2009 ம் ஆண்டு லா அக்கியூலா பகுதியில் இடம் பெற்ற நில நடுக்கத்தில் 300 பேர் இறந்தது தெரிந்ததே.

அலைகள்

0 Responses to இத்தாலியில் நில நடுக்கம் இதுவரை ஐந்துபேர் மரணம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com