Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பான் கி மூன் அவர்களே நலமா..
முள்ளிவாய்க்கால் மறக்க முடியாத மூனே..
மூன் என்றால் நிலவென்பார் அது
முகிலில் மறைந்ததனால் – அன்று
முள்ளி வாய்க்காலே இருளில் கிடந்தது
சர்வதேச குற்றமெல்லாம் நடக்க
சலனமின்றி இருந்தீர்..
ஐ.நாவுக்கு சந்தா கட்டாத
நாடில்லா இனத்தை
நாயிலும் கடையாய் கருதி
கடைத் தெருவில் விட்டீர்…
கண்ணீரும் அலறலும் கேட்டும்
கேட்கட்டும் கேட்கட்டுமென
நம்பியார் பேச்சை கேட்டீர்
கேடுகெட்ட இனமெனக் கருதி
காவல் கடமையை விட்டீர்…
முழுதும் முடியட்டும் என்றோ
முகிலுக்குள் முடங்கினீர் முழுக்க..
முடிந்த பின் வந்து நின்றீர்
மகிந்த கையால் மாலைபோட்டீர்..
மகிழ்ச்சியோடு சிரித்தீர்..
உம்மை நம்பி நாதியற்று நின்றவரை மறந்தீர்..
போர்க்குற்றவாளி சிங்களவன் மட்டுமா..
சாவதைத் தடுக்காமல் பார்த்துக்
கொண்டிருந்தவனுக்கு எதிராக
செனீவாவவில் சட்டமியற்றாத
சங்கதி என்ன..?
எல்லாம் முடிந்தது..
முள்ளி வாய்க்காலுக்கு இன்று
மூன்றாவது ஆண்டு..
மூன் தெரியாத மண்ணில்
மூடுண்டு கிடக்கிறோம்…
எல்லா மண்டையோட்டு வாய்களும்
கூம்பிக்கிடக்கிறதே
ஏனென்று கேட்கிறீரா..?
சாக முந்தி எல்லோரும் ஒன்றாய்
தூ.. என்று
காறித் துப்பிவிட்டுத்தான் செத்தோம்..

0 Responses to மே 18 | மறக்க முடியாத மனிதர்கள் | பான் கி மூன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com