ஆசியாவில் ஜனநாயக நாடு என இலங்கையை கருதமுடியாத நிலையே உள்ளது. செயற்பாட்டுத் திட்டத்தை அமெரிக்காவிடம் கையளிப்பதற்கு முதல் அரசு எதிர்க்கட்சிகளின் ஆலோசனையைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர நேற்று நாடாளுமன்றில் தெரிவித்தார்.
நல்லிணக்க ஆணைக் குழுவின் பரிந்துரைகள் தொடர்பில் நாடாளுமன்றில் நேற்று நடைபெற்ற சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரை யாற்றும்போதே மங்கள சமர வீர மேற்கண்டவாறு தெரி வித்தார். அவர் அங்கு மேலும் கூறியவை வருமாறு
தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரேரணையாக இந்த சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை காணப்படுகின்றது. ஆனால், பதிலளிக்க வேண்டிய அமைச்சர்கள் சபையில் இல்லை. அமைச்சர்களான ஜி.எல்.பீரிஸ், மஹிந்த சமர சிங்க ஆகியோர் எங்கே?
நான் நினைக்கின்றேன், அமெரிக்கா செல்வதற்காக பொதிசெய்யும் வேலைகளில் வெளிவிவகார அமைச்சர் ஈடுபட்டுள்ளார் போலும். அரசின் வெளிநாட்டுக் கொள்கைகளால் நாம் தனிமைப்பட்டுள்ளோம். 2006 ஆம் ஆண்டு நான் ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தில் வடக்கு, கிழக்கு குறித்து குறிப்பிட்டிருந்தேன்.ஒரு அரசு என்ற ரீதியில் பொறுப்புக்கூறும் தன்மை எங்களுக்கு இருந்தது.
சட்டமானது எல்லோருக்கும் மதிப்பளிக்கும் வகையில் காணப்பட வேண்டும். 2006 ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை 7 குழுக்கள்வரை நியமிக்கப்பட்டிருக்கும் என நான் நினைக்கின்றேன்? இவற்றால் கண்ட பயன் என்ன? கட்டுநாயக்க சம்பவம் தொடர்பிலும் ஆராய குழு நியமிக்கப்பட்டது.
வாக்காளர்களை காட்டிக்கொடுத்தால் அது மக்களையும் நாட்டையும் காட்டிக் கொடுக்கும் செயலுக்கு ஒப்பானதாகும். 18 ஆவது அரசமைப்பை அங்கீகரித்துக் கொண்டதன் மூலம் அரசு ஜனநாயகத்துக்கு அஞ்சலி செலுத்தியுள்ளது. இலங்கை ஆசியாவில் ஜன நாயக நாடு என கருதமுடியாத நிலையே உள்ளது. செயல் திட்டத்தை அமெரிக்காவிடம் சமர்ப் பிப்பதற்கு முதல் நீங்கள் எதிர்க்கட்சிகளிடம் ஆலோசனைகளை பெறுங்கள் என்றார் மங்கள சமரவீர.
0 Responses to இலங்கை ஜனநாயக நாடு என்று கருதவே முடியாது | மங்கள