Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழீழ விடுதலைப் போரின் தடைநீக்கிகளாக, உயிராயுதமாகி, தம்மையே அர்ப்பணித்து விடுதலைப்போருக்கு வலுச்சேர்த்து, வீரகாவியமாகிவிட்ட தேசப்புயல்களை நினைவுகொள்ளும் "தற்கொடையாளர் நாள்" நிகழ்வு எதிர்வரும் ஜுலை- 5 இல் பிரித்தானியாவில் நடைபெறவுள்ளது.

காற்றிலும் நீரிலும் கலந்த கந்தகத்துகழ்களை நினைவுகொள்ளும் நிகழ்வாக அமையும் இந்த "தற்கொடையாளர் நாள்" நிகழ்வுகள், பிரித்தானியாவின் தென்மேற்கு லண்டன் பகுதியின் 51, Woodland Way, Mitcham, Surrey, CR4 2DY எனும் முகவரியில் அமைந்துள்ள NORTH MITCHAM ASSOCIATION LTD மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

எதிர்வரும் 05-07-2012 மாலை 6:00 முதல் 9:00 வரை நடைபெறவுள்ள இந்த வணக்க நிகழ்வில், பிரித்தானியாவாழ் தமிழ்மக்கள் அனைவரையும் வந்து கலந்துகொள்ளுமாறும், எம்மோடு வாழ்ந்து, எம்மோடு உறவாடி சிரித்த முகத்தோடு மில்லர், அங்கையற்கன்னி வரிசையில் சரித்திரம் படைத்த தேசப்புயல்களை நெஞ்சில் நிறுத்தி நினைவு கொள்வோம் எனவும் தமிழ்த் தேசிய நினைவேந்தல் அகவம் கேட்டுக் கொள்கின்றது.

முகம் மறைத்து, முகவரி மறைத்து வாழ்ந்து தமக்கான இலக்கு வரும்வரை காத்திருந்து, தமிழர்கள் இன்புற்றிருக்க வேண்டும் என்பதற்காக தம்மை இல்லாதொழித்து ஊமையாய் உறங்கிக் கொண்டிருக்கும் அத்திவாரக் கற்களாய் தமிழர் வரலாற்றின் என்றும் அழியா வீரகாவியம்.

அந்த இரும்பு மனிதர்களின் உடல்களும், உணர்வுகளும் கலந்த காற்றை சுவாசிக்கும் தமிழீழ விடுதலை விரும்பிகளின் இதயம் அவர்களின் பெயர் சொல்லியே துடிக்கும். அது புதியதோர் புரட்சியாய் வெடிக்கும். அந்த வெடிப்பின் நடுவே தமிழீழம் மலரும்.

அன்றைய நாள் தமிழீழ வான் பரப்பில் இந்த தற்கொடையாளர்களான இரும்பு மனிதர்கள் நட்சத்திரங்களாய் மின்னுவர் என்பது உறுதி.

0 Responses to லண்டனில் ஜுலை-5, தற்கொடையாளர் நாள் நிகழ்வுகள்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com