சென்னையில் நடக்கும் பல விடையங்கள் வெளியே வருவது இல்லை. ஆனால் அதனை எல்லாம் திரைக்கு வெளிச்சம்போட்டு காட்டுகிறார்கள் நீயா நானா நிகழ்சித் தயாரிப்பாளர்கள். சமீபத்தில் நடந்த விடையம் பலரின் வயிற்றில் புளியைக் கரைக்கும் விடையமாக உள்ளது. நிம்மதிதேடி பேஃஸ் புக் அல்லது சட்டிங் போனால் அதனூடாக வரும் தலையிடியை தாங்க முடியவில்லை என்கிறார்கள்! நபர் ஒருவர் சில காலங்களுக்கு முன்னர் ஒரு வங்கியிடம் கிரெடிட் காட் ஒன்றைப் பெற்று, அதில் உள்ள பணத்தை எடுத்துவிட்டு, பின்னர் அதனைக் கட்டாமல் தப்பித்துள்ளார். அவரை பேஸ் புக் மூலம் ஒரு இளம் பெண் தொடர்புகொண்டு, நட்பை வளர்த்து, அவரிடமே நீங்கள் எந்த விலாசத்தில் உள்ளீர்கள் என்று கேட்டுள்ளார் அப்பெண்.
நம்மாளும், அப்பெண்ணை சந்திக்க நல்ல வாய்ப்பு என்று நினைத்து தன் விலாசத்தை கூறியுள்ளார். அவ்வளவுதான்! டான் என்று குதித்துள்ளார்கள் வசூல் ராஜாக்கள்! இந்த வீடியோவை பாருங்கள் மேட்டர் புரியும்!
காணொளி இணைப்பு
0 Responses to வித்தியாசமான முறையில் கிரெடிட் காட் வசூல்! (காணொளி இணைப்பு)