28.06.1995 அன்று மண்டைதீவு படைத்தளம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் சூட்டி உட்பட்ட 8 மாவீரர்களின் 17ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.
தேசியத் தலைவரின் நேரடி நெறிப்படுத்தலில் கடற்புலிகளின் துணையுடன் மண்டைதீவில் தரையிறங்கிய விடுதலைப் புலிகளின் படையணிகள் அங்கிருந்த சிறிலங்கா படைத்தளத்தைத் குறுகிய நேரத்தில் தாக்கியழித்து சிறிலங்கா படையினருக்கு பேரிழப்பை ஏற்படுத்தினர்.
300ற்கும் மேற்பட்ட சிறிலங்கா படையினர் கொல்லப்பட்டதுடன் பல நூறு படையினர் படுகாயமடைந்த இத்தாக்குதலின்போது பெருமளவான ஆயுத தளபாடங்களும் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டது.
இவ்வெற்றிகரத் தாக்குதலின்போது
லெப்.கேணல் சூட்டி (தம்பிமுத்து கோவிந்தராஜன் - அம்பாறை)
மேஜர் தமிழ்மாறன் (கஜேந்திரன்) (அரசரட்ணம் பாலகிருஸ்ணன் - தோப்பூர், திருகோணமலை)
கப்டன் மாறன் (குணநாயகம் குலேந்திரன் - அல்வாய், யாழ்ப்பாணம்)
கப்டன் எழிற்செல்வன் (ஜவான்) (செல்லப்பு தயாபரன் - புத்தூர், யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் அகிலன் (அருச்சுனன் சிவரதன் - பண்டத்தரிப்பு, யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் உதயா (கந்தையா சித்திரகுமாரி - கண்டி, சிறிலங்கா)
2ம் லெப்டினன்ட் இசையழகன் (கிறிஸ்ரி) (கந்தையா கணேசமுர்த்தி - வாழைச்சேனை, மட்டக்களப்பு)
வீரவேங்கை பாமினி (சின்னவன் நகுலேஸ்வரி - புத்தூர், யாழ்ப்பாணம்)
ஆகிய போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.
தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரமறவர்களை இன்றைய நாளில் நினைவு கூருகிறோம்.
மண்டைதீவு படைத்தள தாக்குதலில் வீரச்சாவடைந்த லெப்.கேணல் சூட்டி உட்பட்ட 8 மாவீரர்களின் 17ம் ஆண்டு நினைவு நாள்
பதிந்தவர்:
தம்பியன்
28 June 2012
0 Responses to மண்டைதீவு படைத்தள தாக்குதலில் வீரச்சாவடைந்த லெப்.கேணல் சூட்டி உட்பட்ட 8 மாவீரர்களின் 17ம் ஆண்டு நினைவு நாள்