Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

‘செக்ஸ்’ டாக்டர் பிரகாஷ் விடுதலை!

பதிந்தவர்: தம்பியன் 25 April 2015

பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்தி, அதை படம் எடுத்து, இன்டர்நெட்டில் வெளியிட்ட வழக்கில் செக்ஸ் டாக்டர் பிரகாஷுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை குறைத்து அவரை சென்னை உயர் நீதிமன்றம் விடுவிக்க உத்தரவிட்டது.

சென்னை அண்ணாநகரில் மருத்துவமனை நடத்தியவர் எலும்பு மூட்டு சிகிச்சை நிபுணர் டாக்டர் பிரகாஷ். மருத்துவமனைக்கு வரும் பெண்களை மயக்கி, அவர்களை ஆபாசமாக படமெடுத்து இன்டர்நெட்டில் வெளியிட்டதாக இவர் மீது புகார் எழுந்தது.

 புதுச்சேரியை சேர்ந்த இளைஞர் கணேசன் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் டாக்டர் பிரகாஷ் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த சரவணன், விஜயன், ஆசிர் குணசிங், நிக்சன் செல்வதாஸ் ஆகியோரை 2001ல் வடபழனி போலீசார்  கைது செய்தனர். எண்ணூர் அருகே உள்ள களஞ்சிக்குப்பம் கடற்கரை பகுதியில் பிரகாஷுக்கு சொந்தமான பண்ணை வீடு உள்ளது. அனைத்து வசதிகளையும் கொண்ட இந்த சொகுசு பங்களாவில்தான் ஆபாச படங்களை எடுத்துள்ளார். பிரகாஷின் தம்பி பிரதீப், அமெரிக்காவில் இருக்கிறார். அவர் மூலம்தான் ஆபாச படங்களை சர்வதேச அளவில் இன்டர்நெட்டில் வெளியிட்டு லட்சக்கணக்கில் பணம் சம்பாதித்துள்ளார்.

இதற்கிடையே, பிரகாஷ் உள்ளிட்ட 5 பேர் மீதும் கொலை முயற்சி, கடத்தல், பாலியல் பலாத்காரம், பெண்களை கொடுமைப்படுத்துதல், மிரட்டுதல், விபசாரத்தில் ஈடுபடுத்துதல், கூட்டுச் சதி உள்ளிட்ட பிரிவுகளிலும், தகவல் தொழில்நுட்பச் சட்டம், ஆயுத தடைச் சட்டம் ஆகிய சட்டப் பிரிவுகளிலும் வழக்கு தொடரப்பட்டது. டாக்டர் பிரகாஷ், குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவர்கள் மீதான வழக்கை, சென்னை 5வது விரைவு நீதிமன்றத்தில்  நீதிபதி ராதா விசாரித்து கடந்த 2008 பிப்ரவரி 6ல் தீர்ப்பளித்தார். தீர்ப்பில் டாக்டர் பிரகாசுக்கு ஆயுள் தண்டனையும் ரூ.1 லட்சத்து 19 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த தண்டனையை எதிர்த்து டாக்டர் பிரகாஷ் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். வழக்கு நீதிபதிகள் தமிழ்வாணன், சி.டி.செல்வம் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. டாக்டர் பிரகாஷ் சார்பில் மூத்த வக்கீல் எ.ரமேஷ், வக்கீல் நமோ நாராயணன், அரசு வக்கீல் சண்முக வேலாயுதம் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் அளித்த தீர்ப்பு வருமாறு: மனுதாரர் பிரகாசுக்கு விரைவு நீதிமன்றம் ஆயுள் தண்டனையும் ரூ. 1 லட்சத்து 19 ஆயிரம் அபராதமும் கடந்த 2008ல் விதித்தது. அதிலிருந்த 13 ஆண்டுகளுக்கு மேல் அவர் சிறையில் இருந்துள்ளார்.

நீதிமன்ற தீர்ப்பு உறுதி செய்யப்படுகிறது. இருந்த போதிலும் டாக்டர் பிரகாஷ் சிறையில் இருந்த காலத்தை தண்டனைக் காலமாக கணக்கில் எடுத்து அவரை விடுதலை செய்ய இந்த நீதிமன்றம் உத்தரவிடுகிறது. அவருக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையை அவர் 8 வாரங்களுக்குள் செலுத்த வேண்டும். இல்லை என்றால் அபராதத் தொகையை செலுத்தாதற்கான தண்டனையை அவர் அனுபவிக்க வேண்டும். இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

0 Responses to ‘செக்ஸ்’ டாக்டர் பிரகாஷ் விடுதலை!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com