Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”


தமிழக தலைவர்கள் பற்றி விமர்சித்தால் மோசமான விளைவுகள் ஏற்படும் என்று மத்திய அரசு இலங்கையை எச்சரிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறி்க்கையில் கூறியிருப்பதாவது,

ஈழத் தமிழர்களின் நலனுக்காக தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருவதை பொறுத்துக் கொள்ள முடியாத இலங்கை மின்துறை அமைச்சர் சம்பிக்க ரணவாக்க, இலங்கையில் தமிழீழம் என்ற பேச்சுக்கே இடமில்லை. தமிழீழத்துக்காக இந்தியா குரல் கொடுத்தால் இலங்கையில் பேரழிவுதான் ஏற்படும். தமிழீழம் அமைக்க தமிழ்நாட்டில் உள்ள தலைவர்கள் முயற்சிக்கக் கூடாது. அவர்களின் விருப்பங்கள் நிறைவேறாது எனக் கூறியுள்ளார். இலங்கை அமைச்சரின் இந்த பேச்சு தமிழர்களின் தன்மானத்துக்கு விடப்பட்ட சவால். இதை தமிழக தலைவர்கள் ஒன்று சேர்ந்து கண்டிக்க வேண்டும்.

இந்தியா கண்டனம் தெரிவிக்காததால்தான் தமிழக தலைவர்களை எப்படி வேண்டுமானாலும் விமர்சிக்கலாம் என்ற துணிச்சல் சிங்களர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதை இனியும் அனுமதிக்கக் கூடாது. சம்பிக்க ரணவாக்கவும் அவரது அரசியல் குருவான ராஜபக்சேவும் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும். தமிழக தலைவர்களை விமர்சித்தால் மோசமான விளைவு ஏற்படும் என்று கொழும்பு செல்லும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் மூலம் இந்திய அரசு எச்சரிக்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

0 Responses to சம்பிக திமிர் பேச்சு ராஜபக்சே உடனே மன்னிப்பு கேட்க வேண்டும்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com