Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கடந்த 2008–ம் ஆண்டு ‘ஈழத்தில் நடப்பது என்ன?’ என்ற தலைப்பில்  ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக பேசினார். இதையடுத்து, அவர் மீது இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கு சென்னை 3–வது கூடுதல் செசன்சு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கு நீதிபதி கயல்விழி முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. வைகோ ஆஜரானார்.

பின்னர் கோர்ட்டில் இருந்து வெளியில் வந்த வைகோ செய்தியாளர்களிடம்,  ‘‘ராஜபக்சேவை திருப்பதிக்கு அழைத்து வந்தது மத்திய அரசுதான். யாரோ ஒரு ஜோதிடர் திருப்பதி வெங்கடாசலபதியை பார்த்து வந்தால், அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று விடுவீர்கள் என்று சொன்னதை நம்பி, ராஜபக்சே இங்கு வந்து சென்றுள்ளார்.

இலங்கையில் இந்து கோயில்கள், முருகன் கோயில்களை எல்லாம் இடித்து, புத்தர் பீடத்தை வைக்கும் ராஜபக்சேவுக்கு, திருப்பதி இந்து கோவிலில் என்ன வேலை?

அவருக்கு வாழ்த்து தெரிவிப்பது, வரவேற்பது எல்லாம் பிரதமர் நரேந்திர மோடிதான். அவர் பெரிய தலைவர். நரேந்திரமோடி என்று சொன்னால், ஒருமையில் பேசுகிறேன் என்று கூறுவார்கள்.

தமிழனத்துக்கு எதிராக செயல்படும் நரேந்திர மோடிக்கு எதிராக தொடர்ந்து போராடுவோம். நரேந்திரமோடி தமிழகத்துக்கு இனி எப்போது வந்தாலும், அவருக்கு நாங்கள் கருப்பு கொடி காட்டி ஆர்ப்பாட்டம் செய்வோம்’’என்று கூறினார்.

0 Responses to ராஜபக்சேவை திருப்பதிக்கு அழைத்து வந்தது மத்திய அரசுதான் - வைகோ

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com