கர்நாடகாவில் பத்திரிகையாளர்களை தாக்கியதில் நித்தியானந்தா உள்பட 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கையடுத்து கர்நாடக முதல் அமைச்சர் சதானந்த கவுடா, நித்தியானந்தாவின் பிடதி ஆசிரமத்தில் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு கலெக்டர் மற்றும் போலீசாருக்கும் உத்தரவிட்டார்.
இதையடுத்து அவர்கள் விசாரணை நடத்தி அறிக்கையை சமர்ப்பித்தனர். பின்னர் பிடதி ஆசிரமத்தை சோதனையிட்டு சீல் வைக்க உத்தரவிட்டனர். மேலும் நித்தியானந்தா மீது ஏற்கனவே இருந்த வழக்குகளில் கிடைத்த ஜாமீன்களை ரத்து செய்து நித்தியானந்தாவை கைது செய்ய கர்நாடக முதல் அமைச்சர் உத்தரவிட்டார்.
ஞாயிற்றுக்கிழமை இரவு மதுரைக்கு தப்பி வந்த நித்தியானந்தா ரகசிய அறையில் பதுங்கினார். ஜாமீனுக்கு முயற்சி செய்த நிலையில், கர்நாடக அரசு கைது நடவடிக்கையை அறிவித்ததையடுத்து, கர்நாடக போலீசார் வந்து கைது செய்யக்கூடும் எனறு நினைத்து மதுரையில் இருந்து தப்பி ஓடும் திட்டமிட்டுள்ளார்
இதனையடுத்து மதுரை ஆதின மடத்தின் இரண்டு பக்க வாசல் கதவுகளை மூடிய ஆதினம் அருணகிரிநாதர் அறிவிப்பு பலகை ஒன்றையும் வைத்துள்ளார். அதில், தற்காலிகமாக பூஜைகள் ரத்து செய்யட்டு, மடம் மூடிவைக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
பூஜை நிறுத்தப்பட்டு, மடம் பூட்டிக்கிடப்பதை கேள்விப்பட்ட மதுரை ஆதின பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.



0 Responses to நித்தி தப்பி ஓட்டம்! மதுரை ஆதின மடம் இழுத்து மூடப்பட்டது!