முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர் அய்யர், மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதிக்கு அவ்வப்போது மக்கள் குறைகேட்க வருவார். அதுபோல் இன்று வைத்தீஸ்வரன் கோயில் அருகே உள்ள திருப்பங்கூர் வந்தவரை பத்திரிகையாளர்கள் சந்தித்தனர்.
பிரணாப் முகர்ஜியின் வெற்றி எப்படி இருக்கும் என்ற கேள்விக்கு, ‘’அந்த வெற்றி என்பது உறுதி’’ என்றார்.
ஜனாதிபதி தேர்தலில் ஜெயலலிதாவின் கொள்கை மாறுபட்டதாக இருக்கிறதே என்ற கேள்விக்கு, ‘’நான் ரொம்ப நாளாகவே
பார்க்கிறேன். ஜெயலலிதாவுக்கு அரசியலே தெரியவில்லை. அவருக்கு தெரிந்ததெல்லாம் தெருக் கூத்து மட்டும்தான்’’என்று சிரித்தபடியே கூறினார்.
0 Responses to ஜெயலலிதாவுக்கு அரசியல் தெரியாது - மணிசங்கர் அய்யர் தாக்கு