பெங்களூருவில் பிடதியில் உள்ள நித்தியானந்தாவின் ஆசிரமத்துக்கு கர்நாடக அரசு சீல் வைத்துள்ளது. மேலும் நித்தியானந்தா மீதான முறைகேடு புகார் குறித்தும் விசாரணை நடத்தவும், அந்த ஆசிரமத்தின் வங்கிக் கணக்குகளை முடக்கவும் உத்தரவிட்டுள்ளது.
மேலும் நித்தியானந்தாவுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யவும் கர்நாடக அரசு உத்தரவிட்டதுடன், அவரை கைது செய்யவும் நடவடிக்கை எடுத்து வருகிறது.
தலைமறைவாக உள்ள நித்தியானந்தா எங்கே உள்ளார் என்று கர்நாடக போலீசார் தேடி வருகின்றனர். ஏற்கனவே பாலியல் குற்றச்சாட்டு எழுந்தபோது, அவர் தலைமறைவாகி வெளிநாடு தப்ப திட்டமிட்டு இமாச்சலபிரதேசத்தில் கர்நாடக போலீசாரால் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
நித்யானந்தாவின் வங்கி கணக்குகளை முடக்குவதுடன் அவரது ஜாமினையும் ரத்துசெய்ய அரசு நடவடிக்கை எடுக்கப்படும் என கர்நாடக முதல்வர் சதானந்த கவுடா தெரிவித்துள்ளார். நித்தியானந்தாவின் முன்னாள் சீடர் ஆர்த்தி தெரிவித்த பாலியல் புகார், செய்தியாளர்கள் சந்திப்பில் செய்தியாளர்கள் தாக்கப்பட்ட உள்ளிட்ட புகார்கள் குறித்தும் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் சதானந்த கவுடா தெரிவித்துள்ளார்.
நித்தியானந்தா எங்கே? வெளிநாடு தப்பிப் போக திட்டமா? தேடுகிறது போலீஸ்!
பதிந்தவர்:
ஈழப்பிரியா
11 June 2012



0 Responses to நித்தியானந்தா எங்கே? வெளிநாடு தப்பிப் போக திட்டமா? தேடுகிறது போலீஸ்!