சிறீலங்கா அரச அதிபர் மகிந்த ராஜபக்சவின் லண்டன் பயணம் அவருக்கும், அவரது நாட்டிற்கும் மிகப்பெரும் அவமானத்தைக் கொடுத்து, அவர் வெட்கித் தலைகுனியும் நிலையை தமிழ் மக்களின் இன்றைய (06-06-2012) போராட்டம் கொடுத்துள்ளது.
சிறீலங்கா அரச அதிபர் மகிந்த ராஜபக்சவின் லண்டன் பயணம் அவருக்கும், அவரது நாட்டிற்கும் மிகப்பெரும் அவமானத்தைக் கொடுத்து, அவர் வெட்கித் தலைகுனியும் நிலையை தமிழ் மக்களின் இன்றைய (06-06-2012) போராட்டம் கொடுத்துள்ளது.
மன்சன் ஹவுஸ் ஆர்ப்பாட்டம்:
இன்று மகிந்த பேச இருந்த மன்சன் ஹவுசிற்கு முன்பாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் காணொளி இது:
மதிய விருந்து:
காவல்துறையினர் மக்களை மறிக்கும் காட்சிகள்:
மக்களின் பேரணியின் முழுமையான தொகுப்பையும், மகிந்த உள்ளேவரும் காட்சியையும் இங்குள்ள காணொளிகளின் காணலாம்:
மகிந்தவைத் தொடர்ந்து பிரித்தானிய மகாராணியார் அங்கு வந்தபோது, போர்க்குற்ற நபரை விருந்துள்ள அழைத்ததைக் கண்டித்து மக்கள் எழுப்பி முழக்கங்களை அவரும் அவதானித்துச் சென்றிருந்தார்.
சிறீலங்கா அரசியல் சாசனம், மகிந்த உருவப்பொம்மை எரிப்பு:
பொதுநலவாய அமைப்பின் செயலகத்திற்கு முன்பாக ஈழத்தமிழ் மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியபோது, சிங்கள, பௌத்த, இனவாதத்தை நிலைநாட்டும் வகையில் எழுதப்பட்ட அந்த நாட்டின் அரசியல் யாப்பு வாசித்துக் காண்பிக்கப்பட்டு, அது தீயிட்டுக் கொழுத்தப்பட்டதுடன், மகிந்தவின் உருவப் பொம்மையும் அங்கு ஆவேசத்துடன் இளைஞர்களால் கொழுத்தப்பட்டது.
விடுதிக்கு முன்பாக:
மகிந்தவின் ஊர்தியை அடையாளம் கண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் அந்த ஊர்தியை நோக்கி முட்டைகள், தண்ணீர் போத்தல்களை வீசி எறிவதை இங்குள்ள காணொளியில் பார்க்கலாம். இதற்கு முன்னதாக பலர் வைத்திருந்த முட்டைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்திருந்ததும் அங்கு நினைவூட்டத்தக்கது.
மகிந்த பரிவாரங்கள்:
மகிந்தவுடன் வந்திருந்த பரிவாரங்கள் விடுதிக்கு வெளியே வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்களை படம் பிடிக்க முனைந்தபோது சனல்-4 மற்றும் ஈழம் டெய்லி செய்தியாளர்களால் அவர்கள் படம் பிடிக்கப்பட்டதுடன், அவர்களது நடவடிக்கை பற்றி காவல்துறையினரிடம் முறையிடப்பட்டது.
ஊடகங்கள்:
போர்க்குற்ற நபரை விரட்டியடித்த தமிழ் மக்களின் இன்றைய போராட்டம் தொடர்பான செய்திகளை சனல்-4, ஐ.ரி.என் தொலைக்காட்சி, பி.பி.சி உலகசேவை, பி.பி.சி பண்பலை, தி. இன்டிபென்டன் பத்திரிகை, கார்டியன் பத்திரிகை உட்பட பல முக்கிய ஊடகங்கள் மற்றும் சுயாதீன ஊடகவியலாளர்கள் பல மணி நேரங்கள் அங்கு வந்திருந்து சேகரித்துக் கொண்டிருந்தனர்.
மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்திக் கொண்டிருந்தபோது, மத்திய லண்டனிற்கு செல்ல வேண்டாம் எனக்கோரும் போக்குவரத்துச் செய்திகளில், தமிழ் மக்களின் போராட்டம் பற்றி அடிக்கடி அறிவிக்கப்பட்டதுடன், ஆர்ப்பாட்டங்கள் முடிவடைய முன்னரே லண்டனில் பல இலட்சம் மக்கள் வாசிக்கும் இலவசப் பத்திரிகையான ‘லண்டன் ஈவினிங் ஸ்ரான்ட்டட்டில்’ ஆர்ப்பாட்டம் பற்றி செய்தி வெளியாகி இருந்தது.
தமிழர்களின் ஆர்ப்பாட்டத்தினால் வெட்கித் தலைகுனிந்த மகிந்த (முழுமையான விபரங்கள்) (காணொளி இணைப்பு)
பதிந்தவர்:
ஈழப்பிரியா
07 June 2012



0 Responses to தமிழர்களின் ஆர்ப்பாட்டத்தினால் வெட்கித் தலைகுனிந்த மகிந்த (முழுமையான விபரங்கள்) (காணொளி இணைப்பு)