சென்னை அண்ணா மேம்பாலத்தில் இருந்து பஸ் கவிழ்ந்து விழுந்து நொறுங்கியது. ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து நடந்த இந்த விபத்தில் 40க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
விபத்தில் காயமுற்ற பயணிகள் அனைவரும் ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டுள்ளனர். சிகிச்சைக்கு கூடுதல் மருத்துவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர. சாலையில் அரசுப்பேருந்து கவிழ்ந்து கிடப்பதால் போக்குவரத்து முடங்கியுள்ளது.
கவிந்த பேருந்தை மீட்கும் பணியில் தீயணைப்பு படை வீரர்கள் மற்றும் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.
பிராட்வேயில் இருந்து வடபழனி சென்ற 17m நம்பர் பேருந்து அண்ணா மேம்பாலத்தில் ரிருந்து ஜி.என்.செட்டி சாலைக்கு செல்ல திரும்பிய போது மோதி கவிந்தது.
ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பக்கவாட்டு சுவரில் மோதி கவிழ்ந்தது நகர் பேருந்து. ஓட்டுநர் செல்போனில் பேசிக்கொண்டே பேருந்தை இயக்கியதால் விபத்து என கூறப்படுகிறது.
அமைச்சர் வளர்மதி சம்பவ இடத்திற்கு சென்று மேற்கொண்டு நடவடிக்கை எடுத்து வருகிறார்.
0 Responses to சென்னை அண்ணா மேம்பாலத்தில் இருந்து பஸ் கவிழ்ந்தது