தமிழர் தாயகத்தின் மீதான சிங்கள அரசின் நில அபகரிப்புக்கு எதிராகவும், தாயக மக்களின் போராட்டங்களுக்கு வலுவூட்டவும், புலம்பெயர் நாடுகளில் நேற்று செவ்வாய்க்கிழமை சமநேரத்தில் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டங்களின் வரிசையில், கனடாவில் இருவேறு இடங்களில் கவனயீர்ப்பு செயற்பாடுகள் இடம்பெற்றுள்ளன.
ரொறன்றோவிலும், வன்கூவரிலும் ஏககாலத்தில் கவனயீர்ப்பு போராட்டமாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் இது ஒருங்குபடுத்தப்பட்டிருந்தது.
தமிழீழத் தாயகத்தினை ஆக்கிரமிப்புச் செய்துள்ள இலங்கை அரசே, தமிழர் தாயகத்தினை விட்டு வெளியேறு என, ரொறன்றோவில் உள்ள இலங்கையின் உயர்காரியாலயத்தின் முன் முழக்கமிட்ட தமிழர்கள், நில அபகரிப்புக்கு எதிராக கண்டனத்தினை வெளிப்படுத்தினர்.
அத்தோடு தாயக மக்களின் போராட்டங்களுக்கு தங்களுடைய தோழமையுணர்வினையும் வெளிப்படுத்திக் கொண்டனர்.
பெருந்திரளான மக்கள் பங்கெடுத்திருந்ததோடு, கனடிய தமிழர் பொது அமைப்பு பிரதிநிதிகளும் கலந்து கொண்டு நிகழ்வுக்கு வலவூட்டினர்.
கனடாவின் இன்னுமொருமுனையான வன்கூவரில் North Side of Art Gallery இடத்தில், இக் கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றிருந்தது.
தமிழர் தாயகத்தினைவிட்டு இலங்கையே வெளியேறு! இலங்கைத் தூதரகம் முன் முழக்கமிட்ட கனேடியத் தமிழர்கள்!
பதிந்தவர்:
ஈழப்பிரியா
27 June 2012
0 Responses to தமிழர் தாயகத்தினைவிட்டு இலங்கையே வெளியேறு! இலங்கைத் தூதரகம் முன் முழக்கமிட்ட கனேடியத் தமிழர்கள்!