Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பகிடிவதைச் சம்பவங்கள் குறித்து பேராதனை பல்கலைக்கழக மாணவர், மாணவிகள் இருபது பேரிடம் இரகசிய பொலிஸார் விசாரணை நடத்தி வருவதாக உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இந்தப் பகிடிவதை போராதனை பல்கலைக்கழக வளவில் இடம்பெற்றுள்ளதாகவும் அதன் காணொளிக் காட்சிகள் சீஐடி மற்றும் ஊடகங்களுக்குச் சென்றது எப்படி? என்பது குறித்த மாணவர்கள் கலக்கத்தில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் காணொளி பிரசித்தமானதால் பெற்றோர்களும் இது குறித்து தன்னிடம் கேள்வி எழுப்புவதாக உயர்கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

சிரேஷ்ட மாணவர்களின் பகிடிவதைக்கு உள்ளான புதிய மாணவர், மாணவிகள் சிலர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்றும் அவர்களிடம் வாக்குமூலம் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் உயர்கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

0 Responses to பேராதனை பல்கலைக்கழக மாணவிகள் மீதான பகிடிவதை! காணொளி வெளியானதால் பெற்றோர் கொதிப்பு! (காணொளி இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com