Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கைத் தீவில் தமிழீழம் அமைக்க வலியுறுத்தி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமென தமிழக வாழ்வுரிமை கட்சி மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் முதல் அரசியல் விழிப்புணர்வு மாநாடு கடலூர் மஞ்சக்குப்பத்தில் இன்று நடைபெற்றது.

இம் மாநாட்டில் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான தொண்டர்களும், பல்லாயிரக்கணக்கான மக்களும் கலந்துகொண்டிருந்தனர்.

இதில் கட்சியில் நிறுவனர் திரு.வேல்முருகன், தலைவர் - பேராசிரியர் தீரன், மாநிலப் பொதுச்செயலாளர் - காவேரி, இணைப்பொதுச் செயலாளர் - போரூர் சண்முகம், அமைப்புச் செயலாளர் - தாரமங்கலம் காமராசு, உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

இம் மாநாட்டில் பிரதான விடயமாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில்,

இனப்படுகொலை செய்யப்பட்டுவரும் ஈழத்தமிழர்களின் சிக்கலுக்கு தமிழீழம் அமைப்பதற்கான தேவையை வலியுறுத்தி அனைத்துக்கட்சி தீர்மானத்தை தமிழக சட்டமன்றில் நிறைவேற்ற வேண்டும்.

அதனை மத்திய அரசின் மூலமாக சர்வதேச நாடுகளுக்கு அனுப்பி ஆதரவு திரட்டப்பட வேண்டும். இதனை ஆதரிக்காத அரசியல் கட்சிகளை தமிழக மக்கள் புறக்கணிக்க வேண்டும்.

அத்தோடு, ஈழத்தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்படுவதற்கு காரணமாக இருந்ததில் ஒருவர் பிரணாப் முகர்ஜி, இவரையும் வரும் குடியரசுத் தலைவர் தேர்தலில் தமிழக அரசியல் கட்சிகள் தோற்கடிக்க வேண்டும்.

மேலும், கடந்த 20 ஆண்டுகளாக செங்கல்பட்டு, பூந்தவல்லி, சிறப்பு முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்களை தமிழக அரசு விடுதலை செய்திட வேண்டும். என்பன அத்தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சில முக்கிய விடயங்களாகும்.

0 Responses to தமிழீழம் அமைக்க வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com