Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் தொகுதி எம்.எல்.ஏவான முத்துச்செல்வி மீது அவரது சகோதரரின் மனைவி சமுத்திரக்கனி நெல்லை மாவட்ட கலெக்டர் செல்வராஜிடம் புகார் மனு கொடுத்துள்ளார்.

அந்த மனுவில், சங்கரன்கோவில் காந்திநகர் முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ. சங்கரலிங்கம் மகன் இளையராஜாவிற்கும் எனக்கும் கடந்த 2010ல் திருமணம் நடந்தது. அப்போது 15 பவுன் நகை 70ஆயிரம் மதிப்பிளான சீர்வரிசை பொருட்கள் எனது பெற்றோர் எனக்கு அளித்தனர்.

கனவர் சரியாக வேலைக்குச்செல்வதில்லை. இதனால் நான் கூலி வேலை செய்து குடும்பம் நடத் தினேன்.

எனது மாமா சங்கரலிங்கம் 50ஆயிரம் வரதட்சனை கேட்டு கொடுமைப்படுத்தினார். தொடர்ந்து அத்தை ராஜம்மாள் எனது கனவரின் சகோதரியும் சங்கரன்கோவில் அதிமுக எம்.எல்.ஏவுமான முத்துச்செல்வி மற்றும் அவரது குடும்பத்தினர் என்னை கொலை செய்துவிடுவதாக மிரட்டு கின்றனர்.

எனக்கும் எனது குடும்பத்தாருக்கும் பாதுகாப்பு வழங்கவேண்டும் என்று கூறியுள்ளார். இதனால் பரபரப்பு நிலவுகிறது.

பரமசிவன்

0 Responses to அதிமுக பெண் எம்.எல்.ஏ. மீது கொலைமிரட்டல் புகார்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com