Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சிரியாவில் உள்ள மஸாராட், அல்குய்யர் நகரங்களில் சிரியப்படைகளால் கொன்று வீசப்பட்ட 55 பேருடைய உடலங்களை பார்க்க சென்ற ஐ.நா கண்காணிப்பாளர் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்யப்பட்டுள்ளது.

நிராயுதபாணிகளாக சென்ற கண்காணிப்பாளர் மீது நடாத்தப்பட்ட தாக்குதலானது சிரிய அதிபர் ஆட்சியில் இருக்கும் லைசென்சை பறிமுதல் செய்துவிட்டதாக பான் கி மூன் நேற்று ஐ.நா பொதுச்சபையில் அறிவித்தார்.

சிரியப் படைகளின் இந்தச் செயலானது அதிர்ச்சி.. பெருந்துயரம் என்றும் அவர் ஐ.நா பொதுச்சபையில் பகிரங்கமாக பிரகடனம் செய்தார்.

சிறீலங்காவில் 140.000 தமிழர்கள் கொல்லப்பட்டபோது அதிர்ச்சி பெருந்துயரம் என்று எதுவும் கூறாது உறங்கிக் கிடந்த பான் கி மூன் இப்போதாவது அதிர்ச்சியடைந்தது வரவேற்கப்பட வேண்டிய விடயமே.

அதேவேளை சிரிய படைகளின் நயவஞ்சக தாக்குதல் தொடர்வதால் ஐ.நா கண்காணிப்பாளர் ஆயுதங்களுடன் நடமாட வேண்டிய நிலை வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதை கேள்விப்பட்டதும் அலறியடித்தபடி வீதிக்கு வந்துள்ளன ரஸ்யா – சீனா ஆகிய சிரியா பாணி ஆட்சி நடக்கும் நாடுகள்.

ரஸ்ய பாதுகாப்பு அமைச்சர் சேர்ஜி லாரோவ் அவசர வேண்டுகோள் ஒன்றை ஐ.நாவுக்கு விடுத்தார்.

ஐ.நாவின் கண்காணிப்பு கடமையில் ஈடுபட்டுள்ள நிராயுதபாணிகளின் உயிர்களுக்கு நாம் உத்தரவாதமளிக்கிறோம் ஆயுதங்களுடன் ஐ.நா கண்காணிப்பாளர் உள்ளே நுழைய வேண்டாமென கேட்டுள்ளார்.

இதே வேண்டுதலை சீனாவும் அவசர அவசரமாக விடுத்துள்ளது.

மறுபுறம்..

இந்த விவகாரத்தில் ஒரு பங்காளியாக ஈரானையும் சேர்க்க வேண்டுமென சிரியா சமாதான பணிகளில் ஈடுபட்டுள்ள கொபி அனான் கேட்டுள்ளார்.

ஐ.நா, அரபுலீக் போல ஈரானும் ஓரங்கமாக பங்கேற்றால் சிக்கல்களை மேலும் விரைவாக தீர்க்கலாம் என்று கூறியுள்ளார்.

ஆனால் இவருடைய ஆலோசனையை அமெரிக்கா நேற்றே நிராகரித்துவிட்டது.

கொபி அனானின் செல்லாக்காசு வேலைகளை குப்பையில் வீசிவிட்டு ஆகவேண்டியதைப் பாருங்கள் என்று சிரிய போராளிகள் குழு கடந்த வாரம் நடைபெற்ற கவுலா படுகொலையின் போதே தெரிவித்துவிட்டது.

அலைகள்

0 Responses to ஆயுதத்துடன் சிரியாவுக்குள் போக வேண்டாம் ரஸ்யா அலறல்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com